திரைத் துளிகள் (16-8-2020)

1 mins read
c46c0f68-d410-48ae-804e-fba28e2ec741
தமிழை விட தெலுங்கில் கீர்த்திக்கான வரவேற்பு பலமாக உள்ளது. கோப்புப்படம்: ஊடகம் -
multi-img1 of 2

கீர்த்திக்கு குவியும் வாய்ப்புகள்

'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றியை அடுத்து தொடர்ந்து பல படங்களில் நடிக்காததால் கீர்த்தி சுரேஷை இயக்குநர்கள் ஒதுக்கிவிட்டதாகப் பேசப்பட்டது.

ஆனால் அது தவறான கணிப்பு என்பது இப்போது தெரியவந்துள்ளது. தமிழை விட தெலுங்கில் கீர்த்திக்கான வரவேற்பு பலமாக உள்ளது.

தற்போது தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதோடு, பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

நாகேஷ் குக்நூர் இயக்கத்தில் 'குட்லக் ஷக்தி' என்ற விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து முடித்துள்ளார்.

ஆந்திர சினிமாவின் வசூல் நட்சத்திரமான மகேஷ் பாபு நடிக்கும் 'சர்காரு வாரி பட்டா' படத்தில் அவருக்கு இணையாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும் இரு படங்களில் நடிப்பது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.

இரட்டை வேடங்கள் ஏற்கும் சிவா

இரட்டை வேடங்கள் என்பது சவாலானது என்பதுடன் அனைத்து நடிகர்களுக்குமே இவ்வாறு நடிப்பதில் ஆர்வம் இருக்கும்.

'ரஜினி முருகன்' படத்தின் இறுதிக்காட்சி யில் இரட்டை வேடங்களில் தோன்றுவார் சிவகார்த்திகேயன்.

அட்லியிடம் பணிபுரிந்த இணை இயக்குநர் அசோக் இயக்கும் படத்தில் தற்போது முதன்முறையாக முழுநீள இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளாராம். ஊரடங்கு முடிந்ததும் இப்படத்துக்கான பணிகள் துவங்க உள்ளன.

இந்நிலையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'டாக்டர்' படத்தில் பாடலாசிரியராகவும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார் சிவா. அனிருத் இசையில் 'செல்லம்மா' என்ற பாடலை எழுதியிருக்கிறார்.

கடந்த மாதம் இணையத்தில் வெளியான இப்பாடலை இதுவரை ஒன்றரை கோடி பேர் பார்த்துள்ளனர்.