நிவேதா: சுதந்திரம் இல்லை

நிவேதா: சுதந்திரம் இல்லை

2 mins read
eb6b5d09-8e55-44e1-b781-9d4c4a4788c1
நிவேதா பெத்துராஜ் -

இன்­றைய நவீன யுகத்­தி­லும் பெண்­களுக்கு உரிய சுதந்­தி­ரம் கிடைப்­ப­தில்லை என்­கி­றார் நிவேதா பெத்­து­ராஜ்.

பெண்­கள் தங்­க­ளுக்­கான சுதந்­தி­ரத்­தைக் கேட்­டுப் பெற­வேண்­டிய நிலை­யில்­தான் இன்­னும் உள்­ள­னர் என்று அண்­மைய சமூக வலைத்­த­ளப் பதி­வில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமிழ் சினி­மா­வில் பிற மொழி நடி­கை­க­ளின் ஆதிக்­கம் வலுத்து வரும் நிலை­யில், 'தமிழ்ப் பெண்­கள் அதி­க­மில்­லையே' எனும் ஆதங்­கத்­தைத் தீர்த்து வைக்க வந்­த­வர்­களில் நிவே­தா­வும் ஒரு­வர்.

மது­ரைப் பெண்­ணான இவர் வளர்ந்­தது, படித்­தது எல்­லாம் துபாயில்­தான்.

எனி­னும் கோடம்­பாக்­கத்­தில் சாதிக்­க ­வேண்­டும் எனும் லட்சி­யத்­து­டன் சென்­னைக்­குப் பறந்து­வந்து போராடி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் ரசி­கர்­க­ளு­டன் இணை­யம் வழி உரை­யா­டி­ய­போது பெண்­க­ளுக்கு முழு­மை­யான சுதந்­தி­ரம் இருப்­ப­தா­கக் கரு­து­கி­றீர்­களா எனும் கேள்வி அவ­ரி­டம் எழுப்­பப்­பட்­டது.

அதற்­கு­தான் மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு பதி­ல­ளித்­துள்­ளார் நிவேதா.

"வேலைக்­குச் செல்­லும் ஒரு பெண் திரு­ம­ணம் செய்­து­கொண்­டால் அவள் தொடர்ந்து வேலை செய்­வதா அல்­லது அதை விட்­டு­விட வேண்­டுமா என்­பதை கண­வர்­தான் முடிவு செய்கி­றார்.

"முன்பு பெண்­கள் வேலைக்­குச் செல்­லக்­கூ­டாது எனும் நிலைமை இருந்­தது எனில், இப்­போ­தும் அவள் வேலைக்­குச் செல்­வது குறித்து முடி­வெ­டுப்­பது கணவர் கையில்­தான் உள்­ளது.

"சில பெண்­கள் தங்­கள் கண­வ­ருக்கு நிலை­மை­யைப் புரி­ய­வைத்து எப்­ப­டியோ அனு­மதி பெற்று வேலைக்­குச் செல்­கி­றார்­கள்.

"மற்­ற­வர்­க­ளுக்கு அவ­சி­ய­மும் விருப்­ப­மும் இருந்­தா­லும் விரும்­பி­ய­படி செயல்­பட முடி­வ­தில்லை. இது வருத்­த­ம­ளிக்­கிறது," என்­கி­றார் நிவேதா பெத்­து­ராஜ்.

இதற்­கி­டையே இந்­திய சுதந்­திர தினத்தை­யொட்டி உண்­மை­யான சுதந்­திரம் என்­றால் என்ன என்­பது குறித்து நடிகை ஓவியா தன் கருத்தை டுவிட்­ட­ரில் பதிவு செய்­துள்­ளார்.

"சுதந்­தி­ரம் என்­பது கொடுக்­கப்­ப­டு­வ­தல்ல, எடுக்­கப்­ப­டு­வது" என்று சுபாஷ் சந்­தி­ர­போஸ் கூறி­யதை அவர் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.

அவ­ரது இந்­தப் பதி­வுக்கு ஏரா­ள­மா­னோர் பின்­னூட்­ட­மிட்­டுள்­ள­னர். சிலர் இக்­க­ருத்­துக்கு உடன்­பட இய­லாது என்றும் சிலர் ஆத­ர­வா­க­வும் பதி­விட்­டுள்­ள­னர்.