கமலி ஃப்ரம் நடுக்காவேரி

கமலி ஃப்ரம் நடுக்காவேரி

1 mins read
4019388b-e589-411e-9a26-3f65e02b4346
-

அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'கமலி ஃப்ரம் நடுக்காவேரி'. இதில் 'கயல்' ஆனந்தி நாயகியாக நடிக்கிறார். மேலும் புதுமுகம் ரோகித் பிரதாப் போத்தன், அழகம்பெருமான், இமான் அண்ணாச்சி, ஸ்ரீஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு கனவுகளைக் கொண்டுள்ள இளம்பெண்ணான கமலிக்கு நன்கு படித்து வாழ்க்கையில் உயர வேண்டும் என்று ஆசை. இந்நிலையில் அவளுக்கு காதல் மலர்கிறது. அவளால் விரும்பியதை அடைய முடிந்ததா என்பதுதான் கதையாம். இதைப் புதுமையான திரைக்கதை அமைப்பு, வசனங்களுடன் திரையில் விவரிக்க இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர்.