எஸ்.பி.பாலா உடல்நிலை: சரண் புது தகவல்

எஸ்.பி.பாலா உடல்நிலை: சரண் புது தகவல்

1 mins read
a4df74ee-f6b6-4b8d-99f8-3154531879c2
-

பாட­கர் எஸ்.பி. பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் உடல்­நி­லை­யில் சற்றே முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

அவர் தற்­போது தனிப்­பட்ட அவ­சர சிகிச்­சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக அவ­ரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரி­வித்­துள்­ளார்.

சுவா­சிப்­ப­தில் ஓர­ளவு முன்­னேற்­றம் இருப்­ப­தா­க­வும் தனது தந்தை முழு­மை­யா­கக் குண­ம­டைய சற்று கால­மா­கும் என்­றும் சரண் கூறி­யுள்­ளார்.

"அப்பா தற்­போது குணமடைந்து வரு­கி­றார். எனி­னும் முழு­மை­யாக குண­ம­டை­வது ஓரிரு நாட்­களில் நடந்­து­வி­டாது. ஆனால் நாங்­கள் நம்­பிக்­கை­யோடு இருக்­கி­றோம். அப்பா நிச்­ச­யம் குண­ம­டைந்து வீடு திரும்­பு­வார்," என்று காணொ­ளிப் பதிவு ஒன்­றில் சரண் குறிப்­பிட்­டுள்­ளார்.

ரசி­கர்­க­ளின் அன்­புக்­கும் பிரார்த்­த­னைக்­கும் நன்றி தெரி­விப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், தனது தந்தை தற்­போது முழுமையான மயக்­க ­நி­லை­யில் இல்லை என்­றும் கூறி­யுள்­ளார்.

"அப்­பா­வால் மற்­ற­வர்­களை அடை­யா­ளம் காண ­மு­டி­கிறது. மருத்­து­வர்­க­ளி­டம் பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டு­கி­றார்," என்று எஸ்.பி.பி. சரண் தெரி­வித்­துள்­ளார். இதற்கிடையே எஸ்.பி.பாலா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதை அறிந்து தாம் மகிழ்ச்சியடைந்ததாக ரஜினிகாந்த் கூறியுள்ளார்.