'பிஸ்கோத்' படத்தில் சில பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகள் உள்ளதாக அதன் இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார். படத்தின் நாயகன் சந்தானம் இக்காட்சிகளில் அசத்தி உள்ளாராம். இதற்காக சில நாட்கள் அவர் பயிற்சி பெற்றதாகவும் இக்காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்பட்டதாகவும் கண்ணன் கூறுகிறார். 'பிஸ்கோத்'தில் பல வித்தியாசமான தோற்றங்களில் காணப்படுவாராம் சந்தானம். அவற்றுள் ஒன்று பாகுபலி போன்று இருக்குமாம். இந்தப் படம் சந்தானத்துக்கு திருப்புமுனையாக அமையும் என்கிறார் கண்ணன்.
'பிஸ்கோத்' - சண்டைக் காட்சியில் அசத்தும் சந்தானம்
1 mins read
-

