சம்யுக்தா: நடனத்தை பிரிக்க முடியாது

3 mins read
e68e0ade-b3ff-4c30-8d13-afec66a92f1d
நட­னம் கற்­றுக்­கொள்­வ­தற்கு வச­தி­யாக ஒரு வேலை அமைந்­த­தும் அதற்கு ஊதி­யம் கிடைத்­த­தும் எனது அதிர்ஷ்­டம் என்கிறார் நடிகை சக்யுக்தா. படம்: ஊடகம் -

நட­னத்­தை­யும் தன்­னை­யும் பிரிக்­கவே இய­லாது என்­கி­றார் நடிகை சம்­யுக்தா ஹெக்டே.

நாள்­மு­ழு­வ­தும் நட­னம் ஆடச் சொன்­னா­லும் சலிக்­கா­மல் ஆடத் தயார் என்று பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இவ­ருக்கு சிறு வயது முதலே நட­னத்­தில் மிகுந்த ஈடு­பாடு உண்­டாம். எனி­னும் முறைப்­படி நடன வகுப்­புக்­குச் சென்று கற்­றுக்­கொள்­ளும் வாய்ப்பு அமை­ய­வில்லை என்கி­றார்.

"என்­னி­ட­மி­ருந்து பிற­ரால் பறிக்­க­மு­டி­யாத ஒரு விஷ­யம் உள்­ளது என்­றால் அது நட­னம்­தான். சிறு வய­தில் நட­னத்­தின் மீதான ஆர்­வம் கார­ண­மாக நடன வகுப்­பில் சேர்ந்­தேன். ஆனால், ஒரு சில நாட்­க­ளி­லேயே நான் பெறு­வது அடிப்­படை நட­னப்­பயிற்சி மட்­டுமே என்­ப­தும் நான் என்ன சாதிக்க விரும்­பு­கி­றேனோ அதற்கு இத்­த­கைய பயிற்சி போதாது என்­றும் புரிந்­து­கொண்­டேன்.

"என் எதிர்­பார்ப்­புக்­கேற்ற பயிற்சி அளிக்­கக்­கூ­டிய இடத்­தைக் கண்டறிந்­த­போது என் குடும்­பத்­தால் பயிற்­சிக்கு செல­வ­ழிக்க இய­லாது என்­பது புரிந்­தது. ஒரு­வேளை என் தந்­தை­யி­டம் எனது விருப்­பத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தால் அவர் நிச்­ச­யம் நிறை­வேற்றி இருப்­பார்.

"எனி­னும் அவர் அதற்­காக கடன்­தான் வாங்க வேண்டி இருக்­கும். அதை உணர்ந்­தி­ருந்­த­தால் அவ­ரி­டம் ஏதும் சொல்­ல­வில்லை," என்­கி­றார் சம்­யுக்தா.

பத்­தாம் வகுப்­பில் தேர்ச்சி பெறும்­வரை தமக்­குத் தாமே பயிற்­சி­யா­ள­ராக இருந்­தா­ராம். அப்­போது ஏதே­னும் பெரிய திடல், பூங்கா அல்­லது திறந்த வெளி­க­ளுக்­குச் சென்று ஆசை தீர, தமக்­குத் தெரிந்த வகை­யில் நட­ன­மா­டு­வா­ராம்.

பத்­தாம் வகுப்­பில் தேர்ச்சி பெற்­ற­தும் தனக்­குள்ள திற­மையை நம்பி ஒரு நட­னப் பயிற்­சி­யா­ள­ரி­டம் உதவி­யா­ள­ரா­கப் பணிக்­குச் சேர்ந்­த­தா­கக் குறிப்­பி­டும் சம்­யுக்தா, அந்­தப் பயிற்சி­யா­ள­ரி­டம் இல­வ­ச­மாக நட­னம் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­ப­து­டன் ஒரு­நாள் இடை­வெளி கூட இல்­லா­மல் தொடர்ந்து நட­னம் ஆட­மு­டி­யும், பல்­வேறு நடன வகை­க­ளைக் கற்றுக்­கொள்ள முடி­யும் என்று கணக்­குப் போட்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"அந்த நடன ஆசி­ரி­யர் மூலம் மேலும் பல பயிற்­சி­யா­ளர்­க­ளின் அறிமு­கம் கிடைத்து எனது திற­மையை வளர்த்­துக்­கொண்­டேன். இத்­த­கைய தொடர்­பு­கள் மூலம் நான் கற்­றுக் கொண்ட நடன நுணுக்­கங்­கள் ஏரா­ளம். எனது நடன ஆசி­ரி­யர் நடத்­திய பயிற்சி வகுப்­பு­கள்­தான் என்னை நன்கு மெரு­கேற்­றி­யது, கூர் தீட்­டி­யது," என்று நன்­றி­யு­டன் குறிப்­பி­டு­கி­றார் சம்­யுக்தா.

அச்­ச­ம­யம் தின­மும் காலை எட்டு மணிக்­கெல்­லாம் கல்லூரிக்­குப் புறப்­பட்டு விடு­வா­ராம். பிறகு கல்­லூரி முடிந்­த­தும் நடன உதவி­யா­ளர் பணிக்­குச் சென்­றால் பல மணி நேரங்­கள் அங்­கேயே கழிந்து­வி­டு­மாம்.

இரவு சுமார் 11 மணி அள­வில்­தான் வீடு திரும்ப முடி­யும் என்று சொல்­ப­வர், இதன் கார­ண­மாக தமக்கு சோர்வோ சலிப்போ ஏற்­பட்­ட­தில்லை என்­கி­றார்.

"கார­ணம், நட­னத்­துக்­கா­கத்­தான் நேரத்­தைச் செல­விட்­டேன். நட­னம் என்­பது எனது ஆன்­மா­வில் கலந்து விட்­டது. அத­னால்­தான் அதை என்­னி­ட­மி­ருந்து எப்­போ­துமே பிரிக்க இய­லாது என்று சொல்­கி­றேன்.

"எனது மகிழ்ச்­சிக்­கான அடிப்­ப­டையே நட­னம்­தான். எனது நட­னப் பய­ணத்­தில் நான் பல­ருக்கு நன்றி சொல்­லக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

"நட­னம் கற்­றுக்­கொள்­வ­தற்கு வச­தி­யாக ஒரு வேலை அமைந்­த­தும் அதற்கு ஊதி­யம் கிடைத்­த­தும் எனது அதிர்ஷ்­டம்.

"எல்­லோ­ருக்­கும் இப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு கிடைத்து­வி­டாது," என்று சொல்­லும் சம்­யுக்தா தமிழ் சினி­மா­வில் வித்­தி­யா­ச­மான வேடங்­களை எதிர்­பார்க்­கி­றா­ராம்.

குறிப்­பாக நட­னத்­து­டன் சம்­பந்­தப்­பட்ட கதை அல்­லது கதா­பாத்­தி­ரங்­கள் அமைந்­தால் தயக்­க­மின்றி ஒப்­புக்­கொள்­வேன் என்­கி­றார்.