சிகிச்சை பெறும் எஸ்பிபி நினைவாற்றலுடன் இருப்பதாக தகவல்

சிகிச்சை பெறும் எஸ்பிபி நினைவாற்றலுடன் இருப்பதாக தகவல்

1 mins read
bcd81c4a-800a-4bba-b7d0-ed7a0270f0ab
-

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரும் பிர­பல பின்­ன­ணிப் பாட­கர் எஸ்.பி.பால­சுப்­பி­ர­ம­ணி­யத்­தின் (படம்) உடல்­நிலை தொடர்ந்து கவ­லைக்­கி­ட­மாக உள்­ள­தாக நேற்று முன்­தி­னம் அந்த மருத்­து­வ­மனை கூறி­யது.

இம்­மா­தம் 5ஆம் தேதி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட எஸ்­பி­பிக்கு கடந்த 14ஆம் தேதி மூச்­சு­வி­டு­வ­தில் சிர­மம் ஏற்­பட்­டது.

இதனால் தீவிர சிகிச்­சைப் பிரி­வி­லும் பின்­னர் தனி அறை­யி­லும் வைத்து அவ­ருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

'எக்மோ' மற்­றும் செயற்கை சுவா­சக்­க­ரு­வி­கள் உத­வி­யோடு அவ­ருக்கு சிகிச்சை தொடர்­வ­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் வெளி­யிட்ட செய்­திக் குறிப்பு தெரி­வித்­தது.

நுரை­யீ­ரல் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் மற்ற உறுப்­பு­க­ளின் செயல்­பா­டு­கள் நன்­றாக உள்­ள­தா­க­வும் மருத்­து­வர்­க­ளின் அறி­வு­ரைக்கு ஏற்ப செயல்­படும் வகை­யில் நினை­வாற்­றல் அவ­ருக்கு இருப்­ப­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, எஸ்பி பாலசுப்பிர மணியத்தின் உடல்­நிலை குறித்து அவ­ரது தங்கை எஸ்.பி.சைலஜா ஒலிப்­ப­திவு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார்.

அதில் அவர், "எஸ்­பி­பி­யின் உடல்­நிலை ஒவ்­வொரு நாளும் முன்­னேற்­றம் அடைந்து வரு­கிறது.

"மருத்­து­வர்­கள் அவ­ருக்கு வென்­டி­லேட்­டர் உத­வி­யின்றி சிகிச்சை அளிக்­கத் தொடங்கி உள்­ள­னர். அவ­ரது நினை­வாற்­ற­லில் முன்­னேற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. இது ஒரு நல்ல அறி­கு­றி­யா­கும்

"எனது சகோ­த­ரர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்­பு­வார் என்று நான் உறு­தி­யாக நம்­பு­கி­றேன்," என்று கூறி­யுள்­ளார்.