பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள படம் 'தமிழரசன்'. இளையராஜா இசையமைத்துள்ளார். இது முழுநீள வணிக அம்சங்கள் நிறைந்த படம் என்கிறார் இயக்குநர். "விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் என்றாலே தரமான கதையும் காட்சி அமைப்பும் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். அதற்கேற்ப இந்தப் படத்தையும் உருவாக்கி உள்ளோம். படம் மிகச் சிறப்பாக உருவானதற்கு முழு சுதந்திரம் அளித்து, தேவையான வசதிகளைச் செய்து கொடுத்த தயாரிப்பாளரும் விஜய் ஆண்டனியும்தான் காரணம். மேலும் இளையராஜாவின் இசையும் பெரும் பலம். நான் அவரைப் பார்த்து வளர்ந்தவன். இன்று எனது படத்துக்கு அவர் இசையமைப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்," என்கிறார் பாபு யோகேஸ்வரன்.
வணிக அம்சங்களுடன் உருவாகிறது 'தமிழரசன்'
1 mins read
விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்துள்ள படம் 'தமிழரசன்'. படம்: ஊடகம் -

