நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துவிட்டதாக வெளியான தகவல் ரசிகர்களையும் திரையுலகத்தினரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
தொழிலதிபர் கௌதம் என்பவர்தான் மணமகன் என்றும் நிச்சயதார்த்த நிகழ்வில் பிரபல தெலுங்குப் பட தயாரிப்பாளர் பெல்லங்கொண்டா ஸ்ரீநிவாஸ் என்பவர் கலந்துகொண்டதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தாண்டு இறுதிக்குள் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், காஜலுக்கு நெருக்கமான சிலரோ இது கட்டுக்கதை என்கிறார்கள்.
தற்போது காஜல் கைவசம் மூன்று புதுப்படங்கள் உள்ளனவாம். கொரோனா கிருமி விவகாரம் முடிவுக்கு வந்து அப்படங்களில் நடித்து முடிக்க குறைந்தபட்சம் ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பதால் 2022 இறுதி வரை திருமணம் குறித்து யோசிக்கவே வாய்ப்பில்லை என்று அவரது தரப்பில் சொல்லப்படுகிறது.

