எம்.எஸ்.பாஸ்கர்: நாகேஷ், மனோரமா ஆகியோர் எனது முன்மாதிரிகள்

எம்.எஸ்.பாஸ்கர்: நாகேஷ், மனோரமா ஆகியோர் எனது முன்மாதிரிகள்

3 mins read
a9af8272-db70-425e-971f-a897dc2b6a4c
குடும்பத்தாருடன் எம்.எஸ்.பாஸ்கர். -
multi-img1 of 2

பின்­ன­ணிக் குரல் கொடுக்­கும் (டப்­பிங்) கலை­ஞ­ராக இருந்து நடி­க­ராக மாறி முத்­திரை பதித்­த­வர் எம்.எஸ். பாஸ்­கர்.

நகைச்­சுவை, வில்­லன், குணச்­சித்­திர வேடங்­கள் என்று எது­வாக இருந்­தா­லும் ரசி­கர்­க­ளின் மனதை ஈர்க்­கும் வகை­யில் அசத்­த­லான நடிப்பை வெளிப்­ப­டுத்­தக் கூடி­ய­வர். தற்­போது அரை டஜன் படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்.

இந்­நி­லை­யில் பார­தி­யார் வேட­மிட்டு இவர் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டம் ஒன்று சமூக வலைத்­தளத்­தில் அண்­மை­யில் பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது. கூடவே ஒரு­சி­லர் சில விவ­கா­ரங்­கள் தொடர்­பில் சில கருத்­து­க­ளை­யும் சேர்த்­தி­ருந்­த­னர். இது­கு­றித்து அவர் விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

அக்­கு­றிப்­பிட்ட புகைப்­ப­டம் இவர் நடித்த 'தம்­பிக்­கோட்டை' படத்­துக்­காக எடுக்­கப்­பட்­ட­தாம். அதை யாரோ ஒரு­வர் இணை­யத்­தில் பதி­வேற்றி உள்­ளார்.

"இதற்கு நான் எந்த வகை­யி­லும் பொறுப்­பல்ல. நான் சமூக வலைத்­த­ளங்­களில் இயங்­க­வில்லை. யாரோ ஒரு­வர் எனது படத்­தை­யும் பெய­ரை­யும் பயன்­ப­டுத்தி நான் சொல்­லாத கருத்­து­களை சமூக வலைத்­த­ளத்­தில் வெளி­யிட்­டுள்­ள­னர். யார் எதற்­காக இப்­படி செய்­கி­றார்­கள் என்­பது எனக்­குத் தெரி­யாது," என்­கி­றார் எம்.எஸ். பாஸ்­கர்.

இயக்­கு­நர் விசு­வின் 'திரு­மதி ஒரு வெகு­மதி'தான் இவர் அறி­மு­க­மான படம். விசுவை மிகுந்த பாசத்­து­டன் 'அண்ணா' என்­று­தான் குறிப்­பி­டு­கி­றார்.

"சென்னை கீழ்ப்­பாக்­கம் பகு­தி­யில் அண்ணா (விசு) வசித்­த­போது, தின­மும் அவ­ரைச் சந்­திப்­பேன். அதி­லும் குறிப்­பாக இரவு நேரங்­களில் பசி எடுத்­தால், என்னை அவர் வீட்­டில் பார்க்க முடி­யும்.

'என்ன பாஸ்­கர் இந்­தப் பக்­கம்?' என்று கேட்­பார். 'இந்­தப் பக்­க­மாக வந்­தேன். பசி எடுத்­த­தால் உங்­கள் வீட்­டுக்கு வந்­தேன்' என்­பேன். 'முதலில் சாப்­பிடு' என்று பாசத்­து­டன் சொல்­வார். இந்­த­ளவு பாசம் காட்­டிய என் அண்ணா கொரோனா ஊர­டங்­கின்­போது கால­மா­னார்.

"அவ­ரது இறப்­புக்­குக் கூட நேரில் செல்ல முடி­யாத சோகம் வாழ்­நாள் முழு­தும் என் மன­தில் இருக்­கும். 'டயா­லி­சிஸ்' பிரச்­சினை கார­ண­மாக அண்ணா மிக­வும் சிர­மப்­பட்­டார். என் சொந்த சகோ­த­ரரை இழந்­த­தாக உணர்­கி­றேன்," என்று சொல்­லும் எம்.எஸ். பாஸ்­கர், தமிழ் சினி­மா­வின் நடப்பு உச்ச நட்­சத்­தி­ரங்­கள் அனை­வ­ரு­ட­னும் இணைந்து பணி­யாற்­றி­யுள்­ளார்.

நடி­கர் நாகேஷ், ஆச்சி மனோ­ரமா, ஆகிய இரு­வ­ரும்­தான் இவ­ரது 'ரோல் மாடல்'களாம். அவர்­க­ளைப் போல் தனது வேலையை மிகக் கச்­சி­த­மா­கச் செய்­ய­வேண்­டும் என்­பதே விருப்­பம் என்­கி­றார்.

"கஷ்­டப்­ப­டா­மல் எதை­யுமே சாதிக்க முடி­யாது. இதை எத்­த­னையோ பேர் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அதே­ச­ம­யம் சாதித்த பிற­கும்­கூட இப்­போது படப்­பி­டிப்­புக்­குச் செல்­லும்­போது, நடிக்க வந்த முதல் நாள் போலவே பொறுப்­பு­டன் செயல்­பட்­டால் தலைக்­க­னம் வராது. மேலும் பிறர் சொல்­வது சரி­யாக இருந்­தால் அதை ஏற்­றுக்­கொள்­வ­தும் நம் உத­வியை நாடு­ப­வர்­க­ளுக்கு முடிந்­த­தைச் செய்­வ­தும்­தான் பெருமை," என்­கி­றார் எம்.எஸ். பாஸ்­கர்.

கமல்­ஹா­சன் குறித்து மணிக்­கணக்­கில் பேசு­ப­வர், அவ­ரு­டன் இது­வரை இணைந்து நடித்­தது போதாது என்­றும் மேலும் பல படங்­களில் நடிக்க விரும்­பு­வ­தா­க­வும் சொல்­கி­றார்.

"என்­னு­டைய 17ஆவது வய­தில்­தான் கமல் அண்­ணாவை முதல் முத­லா­கப் பார்த்­தேன். 'அன்னை வேளாங்­கண்ணி' படத்­தில் அவர் பணி­யாற்­றிய நேர­மது. பின்­னர் 'தேவர் மகன்', 'மகா­நதி' படங்­க­ளுக்­குப் பின்­ன­ணிக் குரல் கொடுத்­த­போது சந்­தித்­தேன். 'தசா­வ­தா­ரம்' படத்­தில் அவ­ரு­டன் இணைந்து நடித்­தேன்.

"'பாப­நா­சம்' படத்­தில் இஸ்­லா­மி­ய­ராக திரு­நெல்­வேலி வட்­டார மொழி­யில் பேசி நடித்­தி­ருப்­பேன். படப்­பி­டிப்­பின்­போது அண்­ணா­வு­டைய (கமல்) கார் படப்­பி­டிப்­புத் தளத்­துக்கு வந்­தால் முதல் ஆளாக ஓடிச்­சென்று கார் கத­வைத் திறப்­பேன். இதை அவ­ருக்­குச் செய்­யக்­கூ­டிய சேவை­யா­கக் கரு­து­கி­றேன்.

"அவ­ரும் காரி­லி­ருந்து இறங்­கியதும் 'அஸ்­ஸ­லாமு அலைக்­கும் பாய்' என்று மறக்­கா­மல் சொல்­வார். அவ­ரு­டன் செல­வி­டும் ஒவ்­வொரு நொடி­யும் உற்­சா­க­ம­ளிக்­கும். இப்­ப­டிப்­பட்ட கலை­ஞர்­க­ளு­டன் திரை­யு­ல­கில் நீடிக்­கும் வரை தொடர்ந்து நடிக்க விரும்­பு­கி­றேன்," என்­கி­றார் எம்.எஸ். பாஸ்­கர்.