'பிக்பாஸ்' நான்காம் பாகத்தில் பங்கேற்பதாக வெளியான தகவலை நடிகை சுனைனா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கொரோனா விவகாரம் காரணமாக இந்தாண்டு 'பிக்பாஸ்' நிகழ்ச்சி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில்தான் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை நடிகைகள் அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா ஆகியோர் போட்டியில் பங்கேற்பார்கள் என்றும் அண்மையில் தகவல் வெளியானது.
எனினும் மற்ற இரு நடிகைகளும் இதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சுனைனா மட்டும் மௌனம் காத்து வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாம் பங்கேற்கவில்லை என தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.
"இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றால், நான் ஒப்புக்கொண்ட படங்களில் எப்படி நடிக்க முடியும்? இந்த நிகழ்ச்சியில் பங்குபெற நான் எப்போதுமே விரும்பியதில்லை," என்று தெரிவித்துள்ளார் சுனைனா.

