அமலாபால் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் தன் நண்பர்களுடன் மதுக்கிண்ணத்தை தன் கையில் ஏந்தி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார் அமலா.
இதுகுறித்து சிலர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் புகை பிடித்து வாயிலிருந்து புகையை வட்டமாக வெளியிடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அமலா.
அதில், "எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணி போல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை," எனும் வாசகங்களும் அவரது பதிவில் இடம்பெற்றுள்ளது.
இளையர்கள் மத்தியில் புகை பிடிப்பதற்கு எதிராக பலரும் தீவிரப் பிரசாரம் செய்து வரும் நிலையில் அமலாபால் புகை பிடிப்பது போன்ற படத்தை வெளியிட்டதற்குக் கண்டனம் எழுந்துள்ளது.

