'காதம்பரி'யை இழந்த விக்னேஷ்

'காதம்பரி'யை இழந்த விக்னேஷ்

1 mins read
7ee0912b-5bc9-4a12-b632-5cbff5a777ea
'நானும் ரவுடிதான்' படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா. படம்: ஊடகம் -

ஒரு படத்­தின் தலைப்­பால் நயன்­தா­ரா­வின் காத­லர் விக்­னேஷ் சிவன் கடும் கோபத்­தில் இருக்­கி­றா­ராம். 'காதம்­பரி' என்­ப­து­தான் அந்­தத் தலைப்பு.

அருள் என்­ப­வர் நாய­க­னாக நடித்து தாமே இயக்கி தயா­ரித்­துள்ள படம் இது. காசிமா நாய­கி­யாக நடித்­துள்­ளார். முழுக்க புது­மு­கங்­க­ளைக் கொண்டு உரு­வா­கி­யுள்­ளது இப்­ப­டம்.

நயன்­தாரா-விக்­னேஷ் சிவன் கூட்­ட­ணி­யில் வெளி­யாகி வெற்றி பெற்ற 'நானும் ரவுடி­தான்' படத்­தில் நயன்­தா­ரா­வின் பெயர்­தான் காதம்­பரி. குறைந்த செல­வில் உரு­வான இப்­ப­டத்­தில் விஜய் சேது­ப­தி­யும் நடித்­தி­ருந்­தார்.

படம் பெரிய அள­வில் பேசப்­பட்­டது. வசூல் ரீதி­யி­லும் வெற்றி கண்­டது. இத­னால் 'காதம்­பரி' என்ற தலைப்­பில் புதுப்­ப­டம் ஒன்றை இயக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­தார் விக்­னேஷ் சிவன்.

இந்­நி­லை­யில் அந்­தத் தலைப்பை வேறொ­ரு­வர் பயன்­ப­டுத்­து­வ­தால் ஏமாற்­ற­ம­டைந்­துள்­ளார். அது­மட்­டு­மல்ல, 'காதம்­பரி' படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பை வெளி­யி­டு­மாறு கேட்டு புது­மு­கம் அருள் தரப்பு இவரை அணு­கி­ய­போது முடி­யாது எனக் கோபத்­து­டன் மறுத்­து­விட்­டா­ராம்.

இந்­நி­லை­யில் ஒரு­சி­லர் விக்­னேஷ் சிவ­னுக்­காக தலைப்பை விட்­டுக் கொடுக்­கு­மாறு அரு­ளி­டம் அறி­வுரை கூறி­யுள்­ள­னர். ஆனால் அவரோ படத்தை வெளி­யி­டும் தரு­ணம் நெருங்­கி­யுள்ள நிலை­யில் தலைப்பை மாற்ற வாய்ப்பே இல்லை என திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­ட­தா­கத் தக­வல்.