பிரஜின், ரியாமிகா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்'. இமான் அண்ணாச்சி, ஜானகி, ஷகிலா, கே.பாக்யராஜ், கானா பாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மார்வின் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை பி.எம்.தயா நந்தன் இயக்கி உள்ளார். சங்கர்ராம் இசையமைத்துள்ளார். "ஜாலியாக சுற்றித்திரியும் இளைஞன் திடீரென ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடுகிறது. இச்சமயத்தில் காதல்வயப்படுகிறான். ஒரு பிரச்சினை என்பது பல சிக்கல்களாக உருவெடுக்கிறது. அவற்றில் இருந்து அவன் எப்படி மீண்டு காதலியை கைப்பிடித்தான் என்பது கதை. குன்றத்தூர் பகுதியில் நடைபெறும் கதை என்பதால் இப்படியொரு தலைப்பை வைத்தோம்," என்கிறார் இயக்குநர்.
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
1 mins read
பிரஜின், ரியாமிகா. படம்: ஊடகம் -

