சூர்­யா­வு­டன் நடித்தது கனவுபோல் உள்ளது என்கிறார் அபர்ணா

சூர்­யா­வு­டன் ‘சூர­ரைப் போற்று’ படத்­தில் நடித்­தது கனவு போல் உள்­ளது என்­கி­றார் படத்­தின் நாயகி அபர்ணா பால­மு­ரளி.

‘8 தோட்­டாக்­கள்’ மூலம் தமிழ் சினி­மா­வில் அறி­மு­க­மான இவர் அடுத்து ஜி.வி. பிர­கா­ஷு­டன் ராஜீவ் மேனன் இயக்­கத்­தில் ‘சர்­வம் தாள­ம­யம்’ படத்­தில் நடித்­துள்­ளார்.

மூன்­றா­வது படத்­தி­லேயே சூர்­யா­வுடன் ஜோடி சேர்ந்­ததை நம்­பவே முடி­ய­வில்லை என்று கண்­கள் விரித்து ஆச்­ச­ரி­யப்­ப­டு­கி­றார் அபர்ணா.

“சூர்யா சார் தொழில் பக்­தி­யும் தீவிர ஈடு­பா­டும் கொண்­ட­வர். படப்­பி­டிப்­பின்­போது அவர் அர்ப்­ப­ணிப்பு உணர்­வோடு பணி­யாற்­றி­ய­தைக் கண்டு பிர­மித்­துப் போனேன்.

“தின­மும் எடுக்­கப்­படும் காட்சி­கள், அவற்­றுக்­கான சூழல், வச­னங்­கள் ஆகி­ய­வற்­றில் மட்­டுமே அவ­ரது கவ­னம் இருக்­கும். அத­னால் அவ­ரி­டம் வேறு எதை­யும் பேச­மு­டி­ய­வில்லை. “குறைந்­த­பட்­சம் அவ­ரு­டன் சேர்ந்து ஒரு புகைப்­ப­டம் கூட எடுத்­துக்­கொள்­ள­வில்லை. முதல்­கட்­டப் படப்­பி­டிப்­பின் கடைசி நாளன்­று­தான், ‘உங்­க­ளோடு ஒரு படம் எடுத்­துக்­கொள்ள வேண்­டும்’ என்­றேன். ‘ஏன் இத்­தனை நாள் கேட்­க­வில்லை’ என்று சிரித்­த­படி புகை­ப்­ப­டம் எடுக்க ஒப்­புக்­கொண்­டார். இந்­தப் படம் நிச்­ச­யம் தமிழ் ரசி­கர்­க­ளால் வர­வேற்­கப்­படும்,” என்று சொல்­லும் அபர்ணா, நடி­கர் விஜய்­யின் தீவிர ரசி­கை­யாம்.

இவ­ரது சொந்த ஊரான கேர­ளா­வில் இயங்­கும் விஜய் ரசி­கர் மன்­றத்­தின் உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்­துள்­ளா­ராம்.

“விஜய் சாரின் படங்­கள் வெளி­யான முதல் நாள் முதல் காட்­சி­யைப் பார்க்­க­வேண்­டும் என துடிப்­பேன். ரசி­கர்­க­ளோடு சேர்ந்து அவ­ரது பிறந்­த­நாளை ஆத­ர­வற்­றோர் அமைப்­பு­டன் சேர்ந்து கொண்­டாடி இருக்­கி­றேன். ‘சர்க்­கார்’ படத்தை முதல் நாளன்றே பார்த்த அனு­ப­வத்தை மறக்க இய­லாது.

“விஜய் சார், சூர்யா சார் படங்­க­ளுக்கு தமி­ழ­கத்­தைப் போலவே கேர­ளா­வி­லும் பெரும் வர­வேற்பு கிடைக்­கும். மோகன்­லால் சார், மம்­முட்டி சார் படங்­க­ளுக்கு இணை­யாக இவர்­க­ளு­டைய பட­மும் கொண்­டா­டப்­படும்.

“சூர்யா சார் நடித்த ‘சில்­லுனு ஒரு காதல்’, ‘காக்க காக்க’ படங்­கள் எனக்கு மிக­வும் பிடித்­த­மா­னவை. விஜய் சாரின் நட­னம் ரொம்­பப் பிடிக்­கும்,” என்று சொல்­லும் அபர்­ணா­வின் தந்தை பால­மு­ரளி ஓர் இசை­ய­மைப்­பா­ளர். அம்மா பின்­ன­ணிப் பாடகி.

கேர­ளா­வின் திருச்­சூர் நக­ரில் பிறந்­த­வர். பின்­னர் கோவை­யில் குடி­யேறி விட்­டார். மலை­யா­ளத்­தில் பகத் பாசி­லு­டன் ‘மகே­ஷிண்டே பிர­தி­கா­ரம்’ படத்­தில் அறி­மு­க­மா­ன­வர் தொடர்ந்து சில படங்­களில் நடித்த பிறகு தமி­ழில் அறி­மு­க­மா­னார். முதல் பட­மான ‘8 தோட்­டாக்­கள்’ படப்­பி­டிப்­பின்­போது சற்றே தட்­டுத் தடு­மாற நேரிட்­ட­தா­கச் சொல்­கி­றார் அபர்ணா.

“கார­ணம் அப்­போது தமி­ழில் சர­ள­மா­கப் பேச வராது. சுற்­றி­லும் தமிழ் ஆட்­கள் இருந்­த­தால் எப்­படி வச­னங்­களை சரி­யா­கப் பேசி நடிக்­கப் போகி­றோம் எனும் பதற்­றம் இருந்­தது. ஆனால், அரை மணி நேரத்­துக்­குள் படக்­கு­ழு­வில் இருந்த அத்­தனை பேரும் மிக இயல்­பா­கப் பேசிப் பழ­கி­னார்­கள். இப்­போது தமிழ் சினிமா எனக்­குப் பிடித்­த­மான கள­மாகி விட்­டது,” என்று சொல்­லும் அபர்ணா, ‘சூர­ரைப் போற்று’ படத்­தில் மதுரை வட்­டார மொழி­யில் பேசி நடித்­துள்­ளா­ராம்.

இதற்­காக பல நாட்­கள் பயிற்சி பெற்­றுள்­ளார். நடிகை கலை­ராணி நடத்­தும் பயிற்­சிப் பட்­ட­றை­யில் சில நாட்­கள் பங்­கேற்­றா­ராம். பிறகு படப்­பி­டிப்பு தொடங்க இருந்த ஒரு வார்த்­துக்கு முன்பே மது­ரைக்­குச் சென்று தங்­கி­யுள்­ளார்.

“அங்கு மது­ரைத் தமி­ழில் பேசு­வது கைதேர்ந்­த­வ­ரான சத்யா அக்கா எனக்கு வெகு­வாக உத­வி­னார். இப்­ப­டிப்­பட்ட பயிற்சி மற்­றும் உழைப்பு கார­ண­மாக பின்­ன­ணிக் குரல் பதிவை ஐந்தே நாட்­களில் முடித்து விட்­டேன்.

“இதற்கு படத்­தின் இயக்­கு­நர் சுதா மேடம்­தான் கார­ணம். படப்­பி­டிப்­பின்­போது ஒவ்­வொரு காட்­சிக்­கும் நமக்கு ஊக்­க­ம­ளிப்­பார். அவ­ரு­டன் பணி­யாற்­று­வது உற்­சா­க­மான அனு­ப­வம். இந்­தப் படத்­தில் எனது நடிப்பு ரசி­கர்­க­ளால் பேசப்­பட்­டால் அதற்கு அவர்­தான் கார­ணம். இப்­ப­டிப்­பட்ட படங்­களில் தொடர்ந்து நடிக்க விரும்­பு­கி­றேன்,” என்­கி­றார் அபர்ணா பால­மு­ரளி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!