இன்று வெளியாகிறது 'லாபம்' முன்னோட்டம்

இன்று வெளியாகிறது 'லாபம்' முன்னோட்டம்

1 mins read
52b307e5-8208-4c70-b7dc-a366d441835b
விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன். படம்: ஊடகம் -

விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் 'லாபம்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு இன்று வெளியீடு காண உள்ளது. எஸ்.பி. ஜனநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் கலையரசன், ஜெகபதிபாபு, சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வழக்கம்போல் இந்தப் படத்திலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கையாண்டுள்ளாராம் எஸ்.பி. ஜனநாதன். இமான் இசையமைத்துள்ள இப்படம் ஆண்டு இறுதிக்குள் வெளியீடு காண உள்ளது.