மகன் சஞ்சய்யுடன் படம் பார்த்துப் பொழுதைக் கழிக்கிறாராம் விஜய்

மகன் சஞ்சய்யுடன் படம் பார்த்துப் பொழுதைக் கழிக்கிறாராம் விஜய்

1 mins read
c385c88e-fe32-4f1b-ae0e-40dc77c0d5d5
கனடாவில் இருந்து வீடு திரும்பியுள்ள மகன் சஞ்சய்யுடன் சேர்ந்து தினமும் இணையத்தில் பல தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசிக்கிறார் விஜய். படம்: ஊடகம் -

'மாஸ்டர்' படம் எதிர்வரும் தீபாவளி சமயத்தில் வெளியாகாது என்பது உறுதியாகி விட்டது. அநேகமாக பொங்கல் பண்டிகையின்போது பட வெளியீட்டை எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 'மாஸ்டர்' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை தீபாவளியின்போது வெளியிட உள்ளனர்.

இதற்கிடையே அண்மையில் உயிரை மாய்த்துக்கொண்ட தனது ரசிகர் பாலா குறித்து அனைத்து விவரங்களையும் சேகரித்துள்ளாராம் விஜய். ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் பாலா குடும்பத்துக்கு சில உதவிகளைச் செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்.

மேலும் கனடாவில் இருந்து வீடு திரும்பியுள்ள மகன் சஞ்சய்யுடன் சேர்ந்து தினமும் இணையத்தில் பல தமிழ்ப் படங்களைப் பார்த்து ரசிக்கிறார் விஜய்.