மேகா ஆகாஷுக்கு அறவே வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டதோ என்று ரசிகர்கள் யோசித்த நிலையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியுடன் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', சல்மான் கானுடன் இந்தியில் உருவாகும் 'ராதே', ஒரு தெலுங்குப் படம் என மேகா கைவசம் மூன்று படங்கள் உள்ளன.
இதையடுத்து ஏ.எல். விஜய் இயக்கும் இணையத் தொடர் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளார். இது காதலை மையமாக வைத்து உருவாகும் தொடராம். இதேபோல் நான்கைந்து கதைகளை மையமாக வைத்து உருவாகும் மற்றொரு இணையத் தொடரிலும் மேகாவைக் காண முடியும். இதில் ஒரு பகுதியை கௌதம் மேனன் இயக்குகிறார்.
"எனினும் திரைப்படங்களுக்கு இணையாக இந்தத் தொடர்களும் பெயர் வாங்கித் தருகின்றன. தவிர சவாலான கதைக்களங்களும் அமைவதால் திறமையை வெளிப்படுத்திய மனத்திருப்தி கிடைக்கிறது. எனவேதான் இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறேன்," என்கிறார் மேகா.

