முடிவடைந்தது 'பொம்மை'யின் இசைக்கோர்ப்புப் பணி

1 mins read
551b07d1-dda4-4b5a-b7ed-27fa1bc0ca47
-

'பொம்மை' படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகளை முடித்துள்ளாராம் யுவன் சங்கர் ராஜா. இத்தகவலை அப்படத்தின் நாயகன் எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார். ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'மான்ஸ்டர்' படத்தை அடுத்து மீண்டும் எஸ்.ஜே. சூர்யாவும் பிரியா பவானி சங்கரும் இணைந்து நடித்துள்ளனர். இது காதலும் திகிலும் நிறைந்த படமாம். ராதாமோகனின் காட்சி அமைப்பும் யுவன் சங்கரின் இசையும் படத்தின் தரத்தை பன்மடங்கு அதிகரித்திருப்பதாக திருப்தி தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா. படத்தின் பாடல்களும் முன்னோட்டக் காட்சித் தொகுப்பும் விரைவில் வெளியீடு காண உள்ளதாகத் தகவல்.