மூன்று தோற்றங்களில் அசத்தும் சந்தானம்

மூன்று தோற்றங்களில் அசத்தும் சந்தானம்

1 mins read
045f20d8-ecf4-4ac5-8339-45b618cc27d1
'டிக்கிலோனா'வில் சந்தானத்துடன் அனகா, ஷெரின். -

சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிக்கிலோனா' படம் பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா, ஷெரின் என படத்தில் இரண்டு நாயகிகள் உள்ளனர்.

மேலும் யோகிபாபு, ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சாரா என பெரும் நகைச்சுவைப் பட்டாளத்தையே களமிறக்கி உள்ளார் இயக்குநர் கார்த்திக் யோகி. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக உருவாகி உள்ளதாம்.

"கதைப்படி கால இயந்திரத்தின் மூலம் 2027ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுக்குச் சென்று விடுகிறார் சந்தானம். அப்போது அவருக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

"இதனால் அதிர்ச்சி அடையும் அவர் திருமணத்தை நிறுத்தச் சொல்கிறார். முதன்முறையாக இந்தப் படத்தில் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார் சந்தானம். அதிலும் ஒரே காட்சியில் இந்த மூன்று தோற்றங்களில் தோன்றுவார்.

"இந்த விவரங்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்ட முன்னோட்டக் காட்சித் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை ரசித்துப் பார்த்து வருகின்றனர். இந்தப் படம் சந்தானத்தின் ரசிகர்களை மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்," என்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.