எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ளது 'சக்ரா'. இதில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் விஷால். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். "இது இணையம் மூலம் நடக்கும் வர்த்தகம் தொடர்பான மோசடிகளைப் பற்றிய விழிப்புணர்வை விவரிக்கும் படம். விஷாலிடம் கதையைச் சொன்ன அடுத்த நிமிடமே தாமே தயாரித்து நடிப்பதாகச் சொன்னார். கதையில் வரும் பெண் போலிஸ் அதிகாரி வேடத்துக்கு யாரை தேர்வு செய்வது என்பதில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. பிறகு ஷ்ரத்தா பொருத்தமாக இருப்பார் என்று ஒருமனதாக முடிவு செய்தோம்," என்கிறார் இயக்குநர் எம்.எஸ். ஆனந்த்.
சக்ரா: கதை பிடித்துப்போனதால் தயாரிக்கும் விஷால்
1 mins read
-

