சேதுபதி வசனத்துக்கு வரவேற்பு

சேதுபதி வசனத்துக்கு வரவேற்பு

2 mins read
26db5b92-b46a-4165-980c-56490be8ffdb
விஜய் சேதுபதி. படம்: ஊடகம் -

எந்த விஷ­யத்­தை­யும் வெளிப்­ப­டை­யா­கப் போட்டு உடைப்­ப­து­தான் விஜய் சேது­ப­தி­யின் வழக்­கம்.

சினிமா சம்­பந்­தப்­பட்ட நிகழ்ச்­சி­களில் பேசும்­போது திரைத்­துறை சார்ந்த விஷ­யங்­கள் குறித்து மட்­டு­மல்­லா­மல், சமூ­கம் சம்­பந்­தப்­பட்ட கருத்­து­க­ளை­யும் தைரி­ய­மாக வெளிப்­ப­டுத்­து­வார்.

அந்த வகை­யில் தற்­போது தாம் நடித்­து­வரும் 'லாபம்' படம் தொடர்­பாக சேது­பதி டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

அண்­மை­யில் இப்­ப­டத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யா­னது. இது­கு­றித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார் சேது­பதி.

"தொழிற்­சாலை இயங்­கி­னால்­தான் விவ­சா­யம் சாத்­தி­யம். அப்போதுதான் மக்­கள் வாழ முடி­யும் என்று நம்ப வைத்து விட்­ட­னர். ஆனால், விவ­சா­யம் செய்­தால் மட்­டும்­தான் இங்கு தொழிற்­சாலை இயங்­க­மு­டி­யும். அது­தான் உண்மை," என்ற வரி­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளார் சேது­பதி.

இந்த வச­னம் ரசி­கர்­களை வெகு­வா­கக் கவர்ந்­துள்­ளது. ஏரா­ள­மா­னோர் இதை சமூக வலைத்­த­ளங்­களில் பகிர்ந்து தங்­கள் வர­வேற்பை தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே நடிகை டாப்சி நடிக்­கும் படத்­தில் கௌரவ வேடத்­தில் தோன்­று­கி­றார் சேது­பதி. 'காஞ்­சனா-2', 'வை ராஜா' உள்­ளிட்ட தமிழ்ப் படங்­களில் நடித்­துள்ள டாப்சி தற்­போது பாலி­வுட்­டில் முன்­னணி நாய­கி­யாக வலம் வரு­கி­றார். அவ­ரது நடிப்­பில் அண்­மைக்­கா­லங்­களில் வெளி­யான 'பிங்க்', 'மிஷன் மங்­கள்' உள்­ளிட்ட படங்­கள் பெரிய வெற்­றி­யைப் பெற்­றுள்­ளன.

இந்­நி­லை­யில் இந்­தி­ய கிரிக்­கெட் வீராங்­கனை மிதாலி ராஜின் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் நடித்து வரு­கி­றார் டாப்சி.

தமி­ழில் ஜெயம் ரவி­யு­டன் 'ஜன­க­ன­மண' பட­மும் இவ­ரது கைவ­சம் உள்­ளது.

இந்­நி­லை­யில் பெய­ரி­டப்­ப­டாத புதிய தமிழ்ப் படத்­தில் டாப்­சியை ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர்.

தீபக் சுந்­தர்­ரா­ஜன் இயக்­கும் இப்­ப­டத்­தில் விஜய் சேது­பதி சிறப்பு வேடத்­தில் நடிக்­கி­றார்.

சில காட்­சி­களில் வந்­தா­லும் வழக்­கம்­போல் தனி முத்­திரை பதிக்­கும் கதா­பாத்­தி­ர­மாக இருக்­கும் என்­ப­தால் இதில் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தாக சேது­பதி தெரி­வித்­துள்­ளார்.

'லாபம்' படத்தை விஜய் சேது­பதி தான் தயா­ரிக்­கி­றார். கொரோனா விவ­கா­ரத்­தால் பட வெளி­யீடு தள்­ளிப் போயுள்ள நிலை­யில், மேலும் இரு படங்­க­ளைத் தயா­ரிக்க முடிவு செய்­துள்­ளா­ராம்.

அதற்­கான கதை விவா­தம் உள்­ளிட்ட பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­வர்­க­ளுக்கு தொடர்ந்து ஊதி­யம் அளித்து வரு­கி­றா­ராம்.