தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிரடி வேடத்தில் சாக்‌ஷி நடிக்கும் 'புரவி'

1 mins read
f7aedc8e-7d37-43ed-a475-fa6b6310a695
படம்: ஊடகம் -

'பிக்பாஸ்' புகழ் சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் உருவாகும் படம் 'புரவி'. ஜி.ஜே. சத்யா இயக்குகிறார். மேலும் சம்பத்ராம் ஷீமோர், சலீமா, அம்மன் சுந்தர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். இதில் அதிரடி சண்டைக் காட்சிகள் உள்ளனவாம். "அரசியல், திகில் உள்ளிட்ட அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் தைரியமும் வேகமும் கொண்ட இளம்பெண்ணாக நடித்துள்ளார் சாக்‌ஷி. முகமது ஆரிப் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடல்களுக்கான நடனமும் ரசிகர்களை வெகுவாகக் கவரும். சாக்‌ஷிக்கு சிறந்த நடிகை என்ற நல்ல பெயரையும் பெற்றுத்தரும்," என்கிறார் இயக்குநர் சத்யா.