நயன்தாரா காதலரின் புலம்பல்

நயன்தாரா காதலரின் புலம்பல்

1 mins read
0cd32461-71f8-4490-a972-570abca4086b
பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் இது வேதனை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் விக்னே‌ஷ் சிவன். படம்: ஊடகம் -

கொரோனா ஊரடங்கு காரணமாக எங்கும் வெளியே செல்ல முடியவில்லை என்று புலம்பியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இவரும் நயன்தாராவும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிநாடு களுக்குப் பறப்பது வழக்க மாக இருந்து வருகிறது.

நயன்தாரா ஒரு படத்தில் நடித்து முடித்ததும் நியூயார்க், பாரிஸ் என்று ஏதேனும் ஓரிடத்தைத் தேர்வு செய்வாராம். அங்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்து, பின்னர் நாடு திரும்பியதும் அங்கே இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் சூட்டோடு சூடாக வெளியிடுவார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் நியூயார்க் நகருக்குச் சென்றபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ். மேலும், பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் இது வேதனை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அடுத்து 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்.