கவிஞர் பேரன் ஆதவுடன் நடிக்கும் வாணி

கவிஞர் பேரன் ஆதவுடன் நடிக்கும் வாணி

1 mins read
9b8d1060-4a7c-46fa-8349-a1bfecacb995
வாணி போஜன் -

கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் நடிக்கும் படம் 'தாழ் திறவா'. இதில் அவருடன் இணைந்து நடிக்கிறார் வாணி போஜன்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு வந்துள்ள வாணிபோஜன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த 'ஓ மை கடவுளே', 'லாக்கப்' உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதையடுத்து விக்ரம் பிரபு ஜோடியாக ஒரு படத்திலும் நடிகர் சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களிலும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் பரணி சேகரனை வைத்து பர்மன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஆதவ் கண்ணதாசனும் வாணிபோஜனும் ஒப்பந்தமாகி உள்ளனர். இதில் சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். 'ஓ மை கடவுளே'வைப் போல் 'தாழ் திறவா'வும் தமக்குப் பெயர் வாங்கித்தரும் என்று நம்புவதாகச் சொல்கிறார் வாணி போஜன்.