இணைய வெளியீட்டின் மூலம் லாபம் தந்த 'சூரரைப் போற்று'

2 mins read
42887327-9f65-4d8c-bfb1-87d9fcf4b42e
'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா, அபர்ணா. -

'சூர­ரைப் போற்று' நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­வது கோடம்­பாக்­கத்­தில் சில தரப்­பி­ன­ருக்கு கோபத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

சூர்யா சுய­ந­லக்­கா­ரர் என்று ஒரு­த­ரப்பு கடு­மை­யாக விமர்­சித்து வரும் நிலை­யில் இணை­யத்­தில் வெளி­யி­டு­வ­தன் மூலம் அவ­ருக்கு அப்­ப­டி­யென்ன லாபம் கிடைத்­து­வி­டப் போகிறது எனும் கேள்­வி­யும் எழுந்­துள்­ளது.

நஷ்­ட­ம­டைந்­தா­லும் பர­வா­யில்லை என்ற முடி­வு­டன்­தான் தன் படத்தை இவ்­வாறு வெளி­யிட முடிவு செய்­தா­ராம் சூர்யா.

கடந்த ஏப்­ரல் மாதம் 'பொன்­ ம­கள் வந்­தாள்' படத்தை இணை­யத்­தில் வெளி­யிட்­ட­போதே பிர­பல அமே­சான் நிறு­வ­னம் 'சூர­ரைப் போற்று'க்கும் கணி­ச­மான தொகையை அளிப்­ப­தாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­தாம். ஆனால், படத்தை விற்­பது குறித்து ஆகஸ்ட் மாத இறு­தி­யில் முடிவு செய்­ய­லாம் என 'சூர­ரைப் போற்று' குழு பதி­ல­ளித்­தது.

இந்­நி­லை­யில் கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக செப்­டம்­பர் இறுதி வரை திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­ப­டு­வது சந்­தே­கம்­தான் எனும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஒரு­வேளை திரை­ய­ரங்­கு­கள் திறக்­கப்­பட்­டா­லும் 40 விழுக்­காடு பார்­வை­யா­ளர்­கள்­தான் உள்ளே அம­ர­மு­டி­யும் என்­ப­தோடு பல்­வேறு நிபந்­த­னை­க­ளைப் பின்­பற்­ற­வேண்­டிய கட்­டா­ய­மும் நில­வு­கிறது.

இத்­த­கைய சூழ்­நி­லை­யில் திடீர் திருப்­ப­மாக சென்­னை­யில் டாஸ்­மாக் மதுக்­க­டை­கள் திறக்­கப்­பட்­ட­போது கூட்­டம் கூட­வில்லை என்­பது திரை­யு­ல­கத்­தி­ன­ருக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

கொரோனா கிருமி விவ­கா­ரத்­துக்கு முன்பு இருந்த விற்­ப­னை­கூட இப்­போது இல்­லை­யாம்.

கிரு­மித் தொற்­றுக்­குப் பயந்து மக்­கள் வெளி­யில் நட­மா­டு­வது குறைந்­தி­ருப்­ப­தற்கு மதுக்­க­டை­யில் கூட்­டம் குறைந்­த­தும் உதா­ர­ண­மாகி விட்­டது.

எனவே, திரை­ய­ரங்­கு­க­ளுக்கு ரசி­கர்­கள் கூட்­டம் எதிர்­பார்த்த அள­வில் கூடுமா எனும் சந்­தே­கம் எழு­வ­தாக கோடம்­பாக்க விவ­ரப்­புள்­ளி­கள் சிலர் சூர்­யா­வி­டம் தெரி­வித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்தே படத்தை இணை­யத்­தில் வெளி­யி­டு­வது என அவர் தீர்­மா­னித்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

'சூரரைப் போற்று' படத்தின் மொத்த பட்ஜெட் சூர்யாவின் சம்பளமில்லாமல் 40 கோடி என்கிறார்கள். சூர்யாவின் சம்பளம் சுமார் 15 கோடி ரூபாய் என்பதுடன் தெலுங்கு உரிமமும் சேர்ந்தது. அதையும் சேர்த்தால் சுமார் 30 கோடி ரூபாய் வரும் என்கிறார்கள்.

இந்­தத் தொகை­யில் சில கோடி­களை விட்­டுக்­கொ­டுத்தே இணை­யத்­தில் படத்தை வெளி­யிட இவர் முன்­வந்­துள்­ளா­ராம்.

எனி­னும் அமே­சான் நிறு­வ­னம் 50 கோடி ரூபாய்க்­குப் பட வெளி­யீட்டு உரி­மத்தை வாங்­கி­யி­ருப்­ப­தாக தமி­ழக ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

செயற்கைக் கோள் ஒளி­ப­ரப்பு மதிப்பு 25 கோடி ரூபாய்க்கு விலை போயுள்­ளது. இந்தி உரி­ம­மும் கணி­ச­மான தொகைக்கு விலை போயி­ருப்­ப­தால்­தான் கிடைக்­கும் லாபத்­தில் 5 கோடி ரூபா­யைத் தேவை உள்­ள­வர்­க­ளுக்­குப் பிரித்­துக் கொடுக்­கப் போவ­தாக சூர்யா தெரி­வித்­துள்­ளார் என ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.