தமிழகத்தில் திரைப்படப் படப்பிடிப்புகளை எப்போது தொடங்கலாம் என்பது தொடர்பில் தமிழக அரசின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாக நடிகர் விஷால் கூறியுள்ளார்.
படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்துள்ள மத்திய அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். பாதுகாப்பான சூழலுக்குத் தேவையான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்துத் திரைப்படப் படப்பிடிப்புகளும் மீண்டும் தொடங்கும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

