வேதிகா: மொழியைப் புரிந்துகொண்டு நடிக்க வேண்டும்

வேதிகா: மொழியைப் புரிந்துகொண்டு நடிக்க வேண்டும்

3 mins read
88cd4e5b-eb4b-45e5-afea-5130d7588f8a
மொழியை நன்கு புரிந்­து­கொண்டு நடிக்­கும்­போது ரசி­கர்­க­ளைக் கூடு­த­லாக ஈர்க்க முடி­யும் என்று நம்­பு­கி­றா­ராம் வேதிகா. படம்: ஊடகம் -

தமிழ்த் திரையுலக ரசி­கர்­க­ளைக் கிறங்­க­டிக்­கும் மும்பை நாய­கி­களில் ஒரு­வர்­தான் வேதிகா. எனி­னும் இவ­ருக்­கும் மற்ற மும்பை நாய­கி­க­ளுக்­கும் இடையே முக்­கிய வித்­தி­யா­சம் உள்­ளது. அது வேதி­கா­வுக்கு சர­ள­மா­கத் தமிழ் பேசத் தெரி­யும் என்­ப­து­தான்.

ஊர­டங்கு வேளை­யில் நாள் தவ­றா­மல் சமூக வலைத்­த­ளங்­களில் ஏதா­வது பதி­வி­டு­கி­றார் வேதிகா. இன்ஸ்­ட­கி­ரா­மில் அவ்­வப்­போது புகைப்­ப­டங்­க­ளை­யும் காணொ­ளி­க­ளை­யும் பகிர்ந்து ரசி­கர்­ க­ளைக் கிறங்­க­டிக்­கி­றார்.

தமிழ், இந்தி, கன்­ன­டம் என மும்­மொ­ழி­களில் வெளி­யா­கும் இவ­ரது பதி­வு­க­ளுக்கு ரசி­கர்­க­ளி­டம் நல்ல வர­வேற்பு கிடைக்­கிறது. வேதி­கா­வின் சொந்த ஊர் மும்பை. அங்கு பிறந்து வளர்ந்­தா­லும் தென்­னிந்தி­யா­வில்­தான் அதிக தொடர்­பு­களை வைத்­தி­ருக்­கி­றார்.

"சினி­மா­வில் நடிப்­பேன் என்றோ அதி­லும் தென்­னிந்தி­யா­வில் இருந்­து­தான் எனது திரைப்­ப­ய­ணம் தொடங்­கும் என்றோ நினைத்­துக்­கூ­டப் பார்த்­த­தில்லை.

"பொது­வாக எனக்­குப் பல மொழி­களில் பேசும் ஆர்­வம் அதி­கம். அத­னால் அவற்­றைக் கற்­றுக் கொள்­கி­றேன். அந்த வகை­யில்­தான் தமிழ், இந்தி, கன்­ன­டம் என்று நடிக்­கத் தொடங்­கி­ய­தும் அவற்­றைக் கற்­றுக்­கொண்­டேன்," என்று விளக்­க­ம­ளிப்­ப­வர், தற்­போது மேலும் மூன்று மொழி­களில் பேசக் கற்று வரு­கி­றார் என்­ப­து­தான் முக்­கி­யத் தக­வல்.

மொழியை நன்கு புரிந்­து­கொண்டு நடிக்­கும்­போது ரசி­கர்­க­ளைக் கூடு­த­லாக ஈர்க்க முடி­யும் என்று நம்­பு­கி­றா­ராம்.

வேதி­கா­வின் நடன அசை­வு­க­ளுக்கு ரசி­கர்­கள் பலர் அடிமை. சிறு வயது முதலே நட­னத்­தில் ஆர்­வம் அதி­க­மாம். குறிப்­பாக நடி­கை­கள் மாதுரி தீட்­சித், ஸ்ரீதேவி நட­னங்­கள் ரொம்­பப் பிடிக்­கு­மாம்.

திரைப்­ப­டங்­களில் அவர்­கள் ஆடு­வ­தைப் பார்த்து வேதி­கா­வும் அதே­போல் ஆடிப் பயிற்சி எடுத்­தி­ருக்­கி­றார். அதன் பல­னாக பள்ளி, கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற பல்­வேறு கலை­நி­கழ்ச்­சி­களில் கலந்­து­கொண்டு பரி­சு­கள் வாங்­கி­யுள்­ளார்.

எனி­னும் ஒரு கட்­டத்­தில் ஆசி­ரியை ஆக­வேண்­டும் என்­ப­து­தான் வேதி­கா­வின் கன­வாக இருந்­துள்­ளது. தூக்­கத்­தில் வரும் கன­வில்­கூட ஆசி­ரி­யை­யா­கத்­தான் தோன்­று­வா­ராம்.

"ஆனால் கல்­லூ­ரி­யில் படித்­த­போது ஸ்ரீதே­வி­யின் 'மூன்­றாம் பிறை' படம் பார்த்­தேன். அதன் ­பி­றகு நடிப்­பின்­மீது ஆர்­வம் ஏற்­பட்­டது. சினி­மா­தான் எதிர்­கா­லம் என்று முடிவு செய்­த­தும் அதற்­குத் தேவை­யான விஷ­யங்­களில் கவ­னம் செலுத்­தி­னேன்.

"அதன்­பி­றகே முறைப்­படி நட­னம் கற்­றுக்­கொண்­டேன். நடிப்­புப் பயிற்­சி­யும் பெற்­றேன். இவை­யெல்­லாம் என் திரைப்­ப­ய­ணத்­துக்கு உத­வி­க­ர­மாக இருந்­தன. தமி­ழில் நடிக்­கத் தொடங்­கி­ய­போது தென்­னிந்­திய சினிமா உல­கம் குறித்து எது­வுமே தெரி­யாது. இங்கு வந்த பிற­கு­தான் இதன் உண்­மை­யான பிரம்­மாண்­டம் பிடி­பட்­டது. தென்­னிந்­தி­யக் கலை­ஞர்­க­ளுக்கு மட்­டும் நாடு தழு­விய அள­வில் வர­வேற்பு இருப்­ப­தற்­கான கார­ணத்­தைப் புரிந்து கொண்­டேன்," என்று சொல்­லும் வேதிகா, நட­னத்தை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் படங்­களில் நடிக்க விருப்­பம் கொண்­டுள்­ளார்.

இது­வரை தனக்­கு­ரிய படங்­க­ளைத் தாமே தேர்வு செய்­த­தா­கக் கரு­த­வில்­லை­யாம். மாறாக, படங்­கள்­தான் தம்­மைத் தேர்வு செய்­த­தா­கக் கரு­து­கி­றா­ராம்.

வேதி­கா­வுக்கு காதல் அனு­ப­வம் உண்டு. எனி­னும் அந்த முதல் காதல் தொடங்­கிய வேகத்­தி­லேயே முடி­வுக்­கும் வந்­து­விட்­டது.

"ஒரு கட்­டத்­தில் தனி­மை­யில் இருக்­கவே அதி­கம் விரும்­பி­னேன். யாரு­டைய தொந்­த­ர­வும் இல்­லா­மல் வீட்­டில் என் அறை­யில் முடங்கி இருப்­பேன். பாடல்­கள் கேட்­பது, புத்­த­கம் படிப்­பது, சமூக வலைத்­தளங்­களில் உல­வு­வது என அந்­தத் தனி­மை­யைப் பின்­னர் இனி­மை­யா­ன­தாக மாற்­றி­யி­ருக்­கி­றேன்.

"பிறகு ஒருநாள் எல்லாருடனும் சகஜமாக பேசிப் பழக வேண்டியது அவசியம் என்ற எண்ணம் தோன்றியதும் முதலில் என் அம்மாவுடன் அதிக நேரம் செலவிட்டேன். பிறகு நெருக்கமானவர்களுடன் பேசத் தொடங்கினேன். ஆனால், இப்போது யாருடனும் காதல் இல்லை," என்கிறார் வேதிகா.

எந்தச் சூழ்நிலையிலும் சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் கொரோனா காலத்தில் மேலும் கறார் பெண்ணாகி விட்டார்.

"நான் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறேனோ அப்படித்தான் திரைப்படங்களில் நான் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரங்களும் அமைந்துள்ளன. எனது வருங்காலக் கணவர் குறித்து சில எதிர்பார்ப்புகள் உள்ளன. மிகுந்த பொறுமைசாலி ஒருவரைத்தான் நான் தேர்வு செய்வேன். அப்படிப்பட்ட ஒருவரால்தான் என்னைச் சமாளிக்க முடியும்.

"தற்போது தமிழில் இரண்டு படங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் நடிகர் உபேந்திராவுடன் ஒரு படமும் இந்தியில் இம்ரான், ரேஷ்மியோடு ஒரு படமும் தயாராகி வருகின்றன," என்று உற்சாகத்துடன் சொல்கிறார் வேதிகா.