எளிமையாக நடந்த மியா ஜார்ஜ் திருமண நிச்சயதார்த்தம்

எளிமையாக நடந்த மியா ஜார்ஜ் திருமண நிச்சயதார்த்தம்

1 mins read
43ee24ef-fd38-4f40-8cfc-9a0fd08dc839
நடிகை மியா ஜார்ஜ், அஸ்வின் பிலிஃப். படம்: ஊடகம் -

நடிகை மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. 'இன்று நேற்று நாளை', 'வெற்றிவேல்', 'ஒரு நாள் கூத்து', 'ரம்', 'எமன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் மியா. தற்போது விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'விலும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் ஃபிலிப்புக்கும் கேரளாவில் நேற்று முன்தினம் திருமண நிச்சயதார்த்தம் எளிமையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படங்களை தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மியா ஜார்ஜ்.