காதல் அலுத்துப் போன பிறகு திருமணம்

காதல் அலுத்துப் போன பிறகு திருமணம்

1 mins read
5e0407a1-2123-4d1f-8a53-5e24d0608e01
எங்கள் இலக்குகளை நிறைவேற்றிய பின்தான் திருமணம் என்கிறார்கள் நயன்தாரா, விக்னே‌ஷ் சிவன். -

திருமணம் குறித்து தானும் நயன்தாராவும் இன்னும் யோசிக்கவே இல்லை என்கிறார் விக்னேஷ் சிவன்.

இருவரது கவனமும் தற்போது திரையுலகம் சார்ந்த பணிகளில் மட்டுமே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எங்கள் இருவருக்கும் ஊடகங்கள் சார்பில் குறைந்தபட்சம் 22 முறை திருமணம் செய்து வைத்துள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது எங்களுடைய திருமணம் ஊடகங்களில் நடந்தேறுகிறது.

"எங்களுக்கு சில இலக்குகள் உள்ளன. அவற்றை எட்டிப்பிடிக்க வேண்டும். இதைச் செய்ய வேண்டும், அதை முடிக்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டுள்ளோம். எனவே அவற்றைச் சாதித்த பிறகுதான் தனிப்பட்ட வாழக்கை மீது எங்கள் கவனம் திரும்பும்.

"காதல் எப்போது அலுத்துப் போகிறது என்று பார்ப்போம். அப்போது திருமணம் குறித்து கண்டிப்பாக வெளிப்படையாக அறிவிப்போம்," என்கிறது இந்தக் காதல் ஜோடி.