'யமுனா', 'மெட்ரோ' படங்களில் நடித்த நடிகர் சத்யாவின் திருமணம் அவரது சொந்த ஊரில் உள்ள கோவிலில் எளிமையாக நடைபெற்றது.
நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணமகன், மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.
மிக விரைவில் திருமண வரவேற்பு நிகழ்வு நடைபெற உள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் சத்யா நடித்துள்ள புதிய திரைப்படம் வெளியீடு காண்கிறது.

