இந்தியில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வந்தாலும் தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளாராம் டாப்சி.
தமிழில் ஏற்கெனவே அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் 'ஜனகனமன' படத்தில் நடிக்கும் அவர், தற்போது அறிமுக இயக்குநர் தீபக் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார்.
மூத்த நடிகரும் இயக்குநருமான சுந்தர்ராஜனின் மகன்தான் தீபக். முழுநீள நகைச்சுவைக் கதையை வைத்து இவர் இயக்கும் படத்தில் குறும்புகள் நிறைந்த சாதாரணப் பெண்ணாக நடிக்க உள்ளார் டாப்சி.
படத்தில் நிறைய நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளாராம் தீபக். அவர் சொன்ன கதையை நம்பி களம் இறங்குகிறார் டாப்சி.

