அறிமுக இயக்குநர் படத்தில் சமந்தா

அறிமுக இயக்குநர் படத்தில் சமந்தா

1 mins read
cf5479c2-dbb5-4edf-89ba-86eeb7982007
சமந்தா. கோப்புப்படம் -

'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்துக்குப் பிறகு அறிமுக இயக்குநர் கௌதம் என்பவரின் படத்தில் நடிக்க உள்ளார் சமந்தா.

ஊரடங்கின்போதுதான் கௌதம் சொன்ன கதையைக் கேட்டுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் அவர் விவரித்த விதமும் அவர் சொன்ன கதையும் பிடித்துப்போனதை அடுத்து கால்ஷீட் ஒதுக்க முன்வந்தாராம்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிறது 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகியாக நடிக்கிறார் நயன்தாரா. காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகிறது இப்படம்.