பெற்றோருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டதில் ஒருபக்கம் வருத்தம் இருந்தாலும் மற்றொரு பக்கம் சில நல்ல செய்திகளையும் கேட்டு வருகிறார் தமன்னா.
விஜய் நடிக்கும் 'தளபதி 65' படத்தில் இவர்தான் நாயகி என தகவல் வெளியாகி உள்ளது.
கடைசியாக சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யுடன் 'சுறா' படத்தில் நடித்திருந்தார் தமன்னா. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கிய இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன்பிறகு இருவரும் ஜோடி சேர முடியாமல் போனது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, முருகதாஸ் இயக்கும் விஜய்யின் 65ஆவது படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 'சுறா' படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்திருந்தது.
தமன்னாவின் பெற்றோர் கிருமித்தொற்றில் இருந்து விரைவில் குணமடைய வழிபாடு செய்து வருவதாக விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

