படம் இயக்கத் தயாராகிறார் அனுபமா

படம் இயக்கத் தயாராகிறார் அனுபமா

3 mins read
776e38f7-c100-428e-aa4c-0caa288ec01f
அனு­பமா பர­மேஸ்­வ­ரன் -

கொரோனா கிருமி புண்­ணி­யத்­தால் முன்­னணி நாய­கி­கள் பல­ரும் நடிப்­ப­தைத் தவிர்த்து தங்­க­ளி­டம் உள்ள இதர பல திற­மை­களை வெளிச்­சம் போட்­டுக் காட்டி வரு­கின்­ற­னர்.

சமூக வலைத்­த­ளப் பக்­கங்­க­ளைத் திறந்­தால் நடி­கை­கள் பல­ரும் பாடு­வது, ஆடு­வது, சமை­யல் செய்­வது, விளை­யா­டு­வது, உடற்­ப­யிற்சி, யோகா செய்­வது என்று காணொ­ளிப் பதி­வு­கள் கொட்­டிக் கிடக்­கின்­றன.

சிலர் கதை எழு­து­கி­றார்­கள். இன்­னும் சிலரோ படங்­களை இயக்­கு­வ­தற்­கான முயற்­சி­யில் ஈடு­பட்­டி­ருக்­கி­றார்­கள். அந்த வகை­யில் நடிகை அனு­பமா பர­மேஸ்­வ­ரன் தன் திற­மையை வளர்த்­துக்­கொள்­ளும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்­ளார். குறிப்­பாக உதவி இயக்­கு­ந­ருக்­கான பணி­க­ளைக் கற்­றுக்­கொண்­டுள்­ளா­ராம்.

மேலும் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொள்­ள­வும் திட்­ட­மிட்­டுள்­ளா­ராம். தற்­போது துல்­கர் சல்­மான் தயா­ரிப்­பில் 'மணி­யா­ர­யிலே அசோ­கன்' என்ற மலை­யா­ளப் படத்­தில் நாய­கி­யாக நடித்­துள்­ளார் அனு­பமா. இப்­ப­டம் சில தினங்­களில் இப்­ப­டம் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாக உள்­ளது.

இதில் நடித்­த­தோடு மட்­டு­மல்­லா­மல் உதவி இயக்­கு­ந­ரா­க­வும் பணி­யாற்றி உள்­ளா­ராம். இத­னால் ஊர­டங்­கின்­போ­தும்­கூட படத்­தின் தொழில்­நுட்­பப் பணி­களில் தன்னை ஈடு­ப­டுத்­திக் கொண்­டுள்­ளார்.

கேரள அர­சாங்­கத்­தின் ஊர­டங்கு விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி பின்­னணி இசை மற்­றும் குரல் பதிவு, படத்­தொ­குப்பு ஆகி­ய­வற்­றில் பங்­கேற்று பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக் கொண்­டா­ராம். தமது இந்த அனு­ப­வங்­கள் குறித்து அவ்­வப்­போது இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்டு வரு­கி­றார்.

அனு­ப­மா­வுக்கு தற்­போது 24 வய­தா­கிறது. தக­வல் தொடர்­புத் துறை­யில் பட்­டப்­ப­டிப்பை மேற்­கொண்­ட­வர், ஐந்­தாண்­டு­க­ளுக்கு முன்பு திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­தால் படிப்­பைப் பாதி­யில் கைவிட நேர்ந்­தது. தற்­போது மீண்­டும் படிப்­பின்­மீது ஆர்­வம் ஏற்­பட்­டுள்­ள­தாம். எனவே தொலை­தூ­ரக் கல்வி முறை­யில் பட்­டப்­ப­டிப்பு மேற்­கொள்ள அவர் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல்.

"மலை­யா­ளத்­தில் தற்­போது நாய­கியை மையப்­ப­டுத்­தும் படங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. அண்­மைய சில மாதங்­களில் அது­போன்ற சில கதை­களை நானும் கேட்க நேர்ந்­தது. அவற்­றுள் சில என்­னைக் கவர்ந்­துள்­ளன. அவற்­றில் நடிப்­பது குறித்து யோசித்து வரு­கி­றேன்.

"தமி­ழில் 'கொடி'க்குப் பிறகு எதிர்­பார்த்த வாய்ப்­பு­கள் அமை­யா­த­தில் வருத்­த­முண்டு. போதா­தக் குறைக்கு ஊர­டங்­கும் வேறு பல தொடர்­பு­க­ளைத் துண்­டித்து விட்­டது. விரை­வில் தமி­ழில் ஒரு சுற்று வரு­வேன்," என்­கி­றார் அனு­பமா.

எனி­னும் தமி­ழில் உரு­வா­கும் இரண்டு இணை­யத் தொடர்­களில் நடிக்­கக் கேட்டு இவரை அணு­கி­யுள்­ள­ன­ராம். சம்­ப­ளம் தொடர்­பான பேச்­சு­வார்த்தை சுமூ­க­மாக முடி­யும் பட்­சத்­தில் இரு தொடர்­கள் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்­பு­கள் விரை­வில் வெளி­யா­கக்­கூ­டும்.

நடிகை கீர்த்தி சுரேஷ் சூர்ய நமஸ்­கா­ரம் செய்­வ­தால் கிடைக்­கும் நன்­மை­கள் குறித்து விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வேலை­யைச் செய்து வரு­கி­றார்.

கொரோனா ஊர­டங்­கின்­போது தீவிர உடற்­ப­யிற்சி மேற்­கொள்­ளும் நடி­கை­க­ளின் பட்­டி­ய­லில் இவ­ரும் இடம்­பெற்­றுள்­ளார்.

குறிப்­பாக தின­மும் காலை­யில் 150 முதல் 200 முறை சூரிய நமஸ்­கா­ரம் செய்­தால் கிடைக்­கும் நன்­மை­கள் குறித்து கடந்த வெள்­ளிக்­கி­ழமை இன்ஸ்­ட­கி­ரா­மில் பதி­விட்­டுள்­ளார் கீர்த்தி.

"நான் சொன்­ன­படி செய்­து­பா­ருங்­கள். உட­லில் ரத்த ஓட்­டம் சீரா­கும். நோய் எதிர்ப்பு சக்தி அதி­க­ரிக்­கும். ஒட்­டு­மொத்த உடல் இயக்­க­மும் புதுப்­பிக்­கப்­படும்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் கீர்த்தி சுரேஷ்.

தான் தின­மும் சூரிய நமஸ்­கா­ரம் செய்­வ­தற்­காக கணி­ச­மான நேரத்தை ஒதுக்­கு­வ­தா­கச் சொல்­கி­றார்.

தான் உடற்­ப­யிற்சி, யோகா செய்­யும் காணொ­ளிப் பதி­வு­க­ளை­யும் அவர் அவ்­வப்­போது வெளி­யிட்டு வரு­கி­றார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.