சசிகுமார், பொன்ராம் கூட்டணியில் உருவான 'எம்ஜிஆர் மகன்'

1 mins read
f93825d8-43de-412e-9545-7ca38e8abdce
-

சிவகார்த்திகேயன் நடித்த 'ரஜினி முருகன்' படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கும் படம் 'எம்ஜிஆர் மகன்'. மிருணாளினி ரவி நாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம்புலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். அந்தோணிதாசன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த பிப்ரவரி மாதமே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கொரோனா விவகாரத்தால் அது சாத்தியமாகாத நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.