படப்பிடிப்பு துவங்க காத்திருக்கும் துருவ்

படப்பிடிப்பு துவங்க காத்திருக்கும் துருவ்

1 mins read
ade6ad95-ae35-4c50-9b0d-fc8f8dc97342
ஆதித்ய வர்மா படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் துருவ் விக்ரம், பனிதா. -

படப்­பி­டிப்பு இல்­லா­த­தால் எதையோ இழந்­து­விட்­ட­தா­கத் தோன்­று­கிறது என தனது ஆதங்­கத்தை வெளிப்­படுத்தி உள்­ளார் துருவ் விக்­ரம்.

'ஆதித்ய வர்மா' படத்­துக்­குப் பிறகு அடுத்­த­கட்ட படங்­களில் கவ­னம் செலுத்­த­லாம் என்று திட்­ட­மிட்ட வேளை­யில் கொரோனா விவ­கா­ரம் இவ­ரை­யும் முடக்­கிப் போட்­டு­விட்­டது. இந்­நி­லை­யில் தமது டுவிட்­டர் பக்­கத்­தில் ஆதங்­கத்­தைப் பதி­விட்­டுள்­ளார்.

"காலை­யில் தூங்கி எழுந்­த­தும் வழக்­க­மாக ஆறு மணிக்கு வரும் படப்­பி­டிப்­புக்­கான அழைப்­பு­கள் இல்லை என்­பதை உணர்ந்­தேன். ஞாயிற்­றுக்­கி­ழமை படப்­பி­டிப்­பு­க­ளை­யும் இழந்­து­விட்­ட­தாக உணர்­கி­றேன்," என்று குறிப்­பிட்­டுள்­ளார் துருவ்.

மேலும் படப்­பி­டிப்பு எப்­போது துவங்­கும் என்று ஆவ­லா­கக் காத்­தி­ருப்­ப­தா­க­வும் ஒரு காட்சி சரி­யா­கப் பட­மா­கும் வரை பல 'டேக்கு'களில் நடிக்க விரும்­பு­வ­தா­க­வும் அவர் மேலும் தெரி­வித்­துள்­ளார். ஊர­டங்­கின்­போது தந்தை விக்­ர­மைப் போலவே கடு­மை­யாக உடற்­ப­யிற்சி செய்து உடலை மேலும் கட்­டுக்­கோப்­பாக்கி உள்­ளார் துருவ்.

கார்த்­திக் சுப்­பு­ராஜ் இயக்­கும் 'சியான் 60' படத்­தில் தந்­தை­யு­டன் இவ­ரும் திரை­யைப் பகிர்ந்­து­கொள்ள இருக்­கி­றார். இது நிழல் உலக குழுக்­க­ளி­டையே நிக­ழும் மோதல்­களை மைய­மாக வைத்து உரு­வா­கும் படம். முதன்­மு­றை­யாக மக­னு­டன் இணைந்து நடிக்­கும் உற்­சா­கத்­தில் விக்­ர­மும் படப்­பிடிப்பு துவங்­கும் நாளுக்­காக ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றா­ராம்.