ஜி.வி.பிரகாஷ்: இது ஏழு ஆண்டு கனவு

ஜி.வி.பிரகாஷ்: இது ஏழு ஆண்டு கனவு

2 mins read
7e8afac2-27b9-4d28-bc8f-c7a4ea2c640a
குழந்தையுடன் ஜி.வி.பிரகாஷ், சைந்தவி தம்பதியர். -

பெண் குழந்­தைக்­குத் தந்­தை­யாகி உள்­ளார் ஜி.வி. பிர­காஷ். குழந்தை பிறந்து நான்கு மாதங்­கள் ஆகின்­றன. ஏதோ சொர்க்­கத்­தில் வாழ்­வது போல் உணர்­வ­தாக பிர­காஷ், சைந்­தவி தம்­ப­தி­யர் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

ஒரு தந்­தை­யாக அளித்­துள்ள முதல் பேட்­டி­யில் பல விவ­ரங்­க­ளைப் பகிர்ந்துகொண்­டுள்­ளார் ஜி.வி.

"எங்­க­ளுக்கு ஒரு குழந்தை என்­பது ஏழு வருடக் கனவு. சைந்­தவி தாய்மை அடைந்­தி­ருப்­ப­தாக மருத்­து­வர் தெரி­வித்­த­போது நான் அடைந்த மகிழ்ச்­சிக்கு அளவே இல்லை. எங்­கள் குடும்­பத்­தில் புது உறுப்­பி­னர் இணை­யப் போவதை நினைத்து அப்பா, அம்மா, தங்கை என்று எல்­லோ­ருக்­குமே மகிழ்ச்சி.

"பொது­வாக வயிற்­றில் குழந்­தை­யைச் சுமந்­தி­ருக்­கும் மனை­விக்கு ஒரு கண­வர் என்­ன­வெல்­லாம் செய்­வாரோ அதை­யெல்­லாம் நானும் சரி­யா­கச் செய்­தி­ருப்­ப­தாக நம்­பு­கி­றேன்.

"சைந்­தவி எதற்­கா­க­வும் அழக்­கூ­டாது, கோபப்­ப­டக்­கூ­டாது, எப்­போ­தும் மகிழ்ச்­சி­யாக இருக்க வேண்­டும் என்று அனைத்­தை­யும் பார்த்­துப் பார்த்து செய்­தேன்.

"பல­ரும் எங்­க­ளி­டம் ஆணா, பெண்ணா எதை எதிர்­பார்க்­கி­றீர்­கள்? என்று பல­முறை கேட்­டுள்­ள­னர். எந்­தக் குழந்­தை­யாக இருந்­தா­லும் மகிழ்ச்­சி­தான் என்று கூறி­ய­போ­தும் பெண் குழந்­தை­யாக இருந்­தால் நன்­றாக இருக்­கும் என்று மன­தோ­ரத்­தில் ஓர் எண்­ணம் இருந்­தது. மாதந்­தோ­றும் நடத்­தப்­படும் பரி­சோ­த­னை­க­ளின்­போது கண்­டிப்­பாக உடன் இருக்க வேண்­டும் என்று சைந்­தவி சொல்­லி­விட்­டார். அதன்­படி ஒரு­முறை கூட அவ­ரைத் தனி­யாக விட­வில்லை.

"பரி­சோ­த­னை­க­ளின்­போது குழந்­தை­யின் உடல் உறுப்­பு­களை ஒவ்­வொன்­றாக மருத்­து­வர் காட்­டும்­போது இனம்­பு­ரி­யா­த­தோர் மகிழ்ச்சி ஏற்­பட்­டது. அதி­லும் குழந்­தை­யின் அசை­வு­களை தாயின் வயிற்­றில் கைவைத்து உணர்ந்து பார்க்­கும்­போது மெய்சிலிர்க்­கும்," என்று சொல்­லும்­போதே ஜிவி பிர­கா­ஷின் உள்­ளம் பூரித்­துப் போயி­ருப்­பதை நாமும் உணர முடி­கிறது.

கடந்த ஏப்­ரல் 19ஆம் தேதி­தான் அழ­கிய பெண் குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்­துள்­ளார் சைந்­தவி. 'உங்­கள் வீட்­டில் இன்­னொரு பாடகி பிறந்­தி­ருக்­கி­றார்' என்று மருத்துவர் குறிப்­பிட்­டா­ராம். முதன்முறை கையில் ஏந்தியபோது குழந்தை அழா­மல் தன்னை நன்கு விழித்­துப் பார்த்­த­தாகச் சொல்­கி­றார் ஜி.வி.

அந்த இனி­மை­யான தரு­ணத்­தைப் பதிவு செய்­ய­வேண்­டும் என்­ப­தற்­காக புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டா­ராம்.

சரி, குழந்­தைக்கு என்ன பெயர்?

"அழ­குத் தமி­ழில் பெயர் வைக்க வேண்­டும் என்று எனக்கு ஆசை. எனவே, வானம் என்ற பெய­ரைத் தேர்வு செய்­தேன். ஆனால் சைந்­த­வி­யும் என் தங்கை பவா­னி­யும் அனு­ம­திக்­க­வில்லை. அவர்­கள் இரு­வ­ரும் சேர்ந்து அன்வி என்ற பெய­ரைத் தேர்ந்­தெ­டுத்­துள்­ள­னர். அன்வி என்­றால் குஜ­ராத்தி மொழி­யில் சூரி­ய­னி­லி­ருந்து வெளி­வ­ரும் முதல் கதிர் என்று அர்த்­த­மாம்," என்று சிரிக்­கி­றார் ஜி.வி. பிர­காஷ்.