'மூக்குத்தி அம்மன்' பட வெளியீட்டில் திடீர் மாற்றம்

'மூக்குத்தி அம்மன்' பட வெளியீட்டில் திடீர் மாற்றம்

1 mins read
783f3d5b-8f46-4923-aed5-6fdb983b9c0a
படம்: ஊடகம் -

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

திரையரங்கில்தான் இப்படம் வெளியாகும் என இயக்குநரும் தயாரிப்பாளரு மான ஐசரி கணேஷ் தெரிவித்திருந்தார்.

எனினும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளில் திரையரங்குகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் ஐசரி கணேஷுக்கும் கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் வேறு வழியின்றி படத்தை இணையத்தில் வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்