கொரோனா ஊரடங்கின்போதும் திரையுலகில் ஏதேனும் நிகழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன. அத்தகைய நிகழ்வுகள் மற்றும் சில கலைஞர்கள் குறித்த அண்மைத்தகவல்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
காதல்: நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடித்த 'மகாஜனங்களே' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' யாஷிகா ஆனந்த்.
இருவரும் இப்போது தீவிரமாக காதல் வயப்பட்டிருப்பதாகப் பேச்சு. இருவரும் இரவு விருந்து நிகழ்வுகளில் ஆடித்திரியும் செய்திகள் கோடம்பாக்கத்தில் வலம் வருகின்றன.
கடந்த வாரம் யாஷிகாவின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறார் உமாபதி.
நிச்சயதார்த்த விழா: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகையும், பிரபல குணச்சித்திர நடிகர் மோகன் ராமின் மகளுமான வித்யூலேகாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சஞ்சய் வத்வானி என்கிற தொழிலதிபர்தான் மணமகனாம்.
திருமணநாள் கொண்டாட்டம்: 'தாமிரபரணி' பானு தனது ஐந்தாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார். கணவருக்கு இதழ் முத்தம் கொடுத்து அந்த அற்புத காட்சியை வலைப் பக்கத்திலும் பதிவேற்றியிருக்கிறார்.
தாய்மை: சமீரா ரெட்டிக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இப்போது எட்டுமாத பெண் குழந்தையும் இருக்கிறது.
இந்தக் காலத்துப் பெண்கள் தாய்மை அடைவதை அச்சமூட்டும் செயலாக பார்ப்பதாகச் சொல்லும் சமீரா, "தாய்மை என்பது பாரமல்ல, வரம்" என தாய்மை பொங்க சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்துகளையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
பெயர் சூட்டுவிழா: 'கேஜிஎஃப்' என்ற ஒரே படம் மூலம் இந்திய அளவில் பிரபலமாகிவிட்ட கதாநாயகன் யஷ். கன்னடத்திலும் முன்வரிசை கதாநாயகனாகி விட்டார். அப்படத்தின் இரண்டாம் பாகம் இப்போதுதான் படப்பிடிப்புடன் தொடங்கி இருக்கிறது. அதற்குள் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இவரது மனைவி ராதிகா பண்டிட் முன்னாள் கதாநாயகி. இத்தம்பதியருக்கு ஏற்கெனவே அயிரா என்கிற பெண் குழந்தை இருக்கிறது.
கடந்தாண்டு இறுதியில் ஆண் குழந்தையும் பிறந்தது. பெயர் சூட்டு விழாவுக்கான நேரம் அமையாமல் நீண்டுகொண்டே போக, மிகவும் எளிமையாக மகனின் பெயர் சூட்டுவிழாவை நடத்தியிருக்கிறார் யஷ்.
யாதர்வ் யஷ் என மகனுக்கு பெயர் சூட்டியுள்ளாராம். 'யாதர்வ்' என்றால் முழுமையானவன் என்று அர்த்தமாம். நடிகை மியா ஜார்ஜை தொடர்ந்து மற்றொரு பிரபல நடிகையும் தனது திருமணம் குறித்து அறிவிக்க இருப்பதாகத் தகவல்.

