சுடச் சுடச் செய்திகள்

கொரோனா அச்சத்தால் தனி விமானத்தில் பறந்த காதலர்கள்

ஓணம் பண்டிகையைக் கொண்டாட நயன்தாரா தன்னுடைய

காதலனுடன் தனி விமானத்தில் கொச்சி சென்றார். இது தற்பொழுது பலராலும் பேசப்பட்டு வருகிறது.

சென்னையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் திரைத்துறையினர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே

அஞ்சுகின்றனர்.

முன்னணி நாயகியான நயன்தாராவும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த ஐந்து மாதங்களாக வீட்டைவிட்டு அவர் வெளியே வரவே இல்லை.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக நயன்தாரா தன் குடும்பத்தினரை கடந்த ஐந்து மாதங்களாக பார்க்காமல் இருந்தார். இந்நிலையில் போக்குவரத்து தொடங்கியதால் நயன்தாரா தன் குடும்பத்தினரை சந்திக்க விரும்பினார்.

ஓணம் பண்டிகையைக் கொண்டாட கொச்சிக்கு மற்ற பயணிகளோடு சென்றால் நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து அதில் அவரும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் கொச்சிக்குச் சென்றனர்.

அவர்கள் தனி விமானத்திலிருந்து இறங்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் ‘பிறந்தால் விக்னேஷ் சிவன் போல பிறக்கவேண்டும்’ என்று பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கின்றனர்.

ஓணம் பண்டிகை தொடர்பாக எடுத்துக்கொண்ட படங்களை விக்னேஷ் சிவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். நயன்தாராவும் ஓணம் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்.

அவை தற்பொழுது பலராலும் பகிரப்பட்டு வருகின்றன. புகைப்

படத்தில் நயன்தாரா கேரள பெண்

களுக்கே உரிய பாரம்பரிய புடவை அணிந்து விக்னேஷ் சிவனுடன் அமர்ந்திருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருந்தன.

நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

கொரோனா நோய்த்தொற்று பிரச்சினையால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் துவங்க முடியவில்லை. தற்பொழுது படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் இப்படத்தின் வேலை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘நானும் ரௌடிதான்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி மூவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஊரடங்கிற்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார்.

இந்தப் படத்தில் இவருடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய நடிகைகளும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தனர். ஆனால், ஊரடங்கு காரணமாக இந்தப் படம் ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்திற்கு முன்பு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக அம்மனாக ‘மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.

படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து படத்தை வெளியிடும் நேரத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் இன்னும் படம் வெளியாகாமல் இருக்கிறது. இந்நிலையில் ஒரு சிலர் இந்தப் படம் இணையத்தில் வெளியாகும் என்று கூறி வருகின்றனர். ஆனால் இந்தப் படத்தை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon