லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் அரசியல் படம்

லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் அரசியல் படம்

1 mins read
3c79f117-065d-42bf-9e35-9151e9600b08
படங்கள்: ஊடகம் -

கார்த்தியை வைத்து 'கைதி' படத்தை இயக்கி தென்னிந்திய திரையுலகத்தைத் திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். அந்தப் படத்தின் மூலம்தான் நடிகர் விஜய்யை வைத்து 'மாஸ்டர்' படத்தை இயக்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து ரஜினியை வைத்து படம் இயக்க இருந்தார். ஆனால் ரஜினியோ "கொரோனா ஒரு முடிவுக்கு வந்த பிறகுதான் படப்பிடிப்புக்கு வருவேன்," என்றதால் துவங்கிய இடத்திலேயே நிற்கிறது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு முழு நீள அரசியல் படம் ஒன்றை இயக்க முடிவெடுத்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே எடுக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

படப்பிடிப்பை விரைவில் துவங்கி தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் படத்தை வெளியிடத்திட்டமிட்டு செயலில் இறங்கியுள்ளது படக்குழு.

அரசியல் சம்பந்தப்பட்ட படம் வெளிவந்து வெகு நாட்களானதால் இந்தப் படத்திற்கு கட்டாயம் மக்களிடையே நல்ல

வரவேற்பு இருக்கும் என்கின்றது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்