சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் 65ஆவது படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்ற விவாதம் நடந்து வருகிறது.
இந்நிலையில் 'தளபதி' என்ற தலைப்பை விஜய்யே தேர்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் நடிப்பில் பெரும் வெற்றியைப் பெற்ற படங்களில் 'தளபதி'யும் ஒன்று. எனவே இந்தத் தலைப்பு விஜய்க்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. இதற்காக சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி வருகிறதாம் சன் பிக்சர்ஸ். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படம் குறித்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
தலைப்பு உறுதியான பின் அறிவிப்பை வெளியிடலாம் எனக் காத்திருப்பதாகத் தகவல்.

