தன்னை நம்பியுள்ள திரைத்துறையினருக்கு உதவ வேண்டியது தனது கடமை என்கிறார் விஜய் ஆண்டனி.
இந்நிலையில் படப்பிடிப்புகளில் பங்கேற்பது என அவர் எடுத்துள்ள முடிவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு திரைப்பட படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து இன்று முதல் தான் நடித்து வரும் 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி' உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளில் பங்கேற்பது என முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
"என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும் என் இயக்குநர்களுக்காகவும் மற்றும் தொழிலாளர்களுக்காகவும் சரியான பாதுகாப்புடன் நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன். நம்பிக்கையுடன் நான்," என்று டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.

