'ரஜினிக்கு மகளாகவும் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்க ஆசை'

'ரஜினிக்கு மகளாகவும் விஜய்க்கு தங்கையாகவும் நடிக்க ஆசை'

2 mins read
08f2744c-a3d4-4bad-af87-ec294ad0f91d
தந்தை லிவிங்ஸ்டன், தாய், தங்கை ஆகியோருடன் ஜோவிதா (வலது ஒரம்). -

சின்­னத்­திரை நடி­கை­யா­கி­யுள்­ளார் நடி­கர் லிவி­ங்ஸ்ட­னின் மகள் ஜோவிதா.

பிர­பல தொலைக்­காட்சி அலை­வரிசை ஒன்­றில் இவர் நடித்­து­வ­ரும் தொடர் விரை­வில் ஒளி­ப­ரப்­பாக இருக்­கிறது.

தந்­தை­யைப் போலவே இவ­ருக்­கும் சினி­மா­வில் நடிக்க விருப்­பம். ஆனால் லிவிங்ஸ்­ட­னுக்கோ தன் குடும்­பத்­தி­லி­ருந்து யாரும் சினி­மா­வுக்கு வரக்­கூ­டாது என்­பதே கொள்கை.

"அதை­யும் மீறி எப்­ப­டியோ தந்­தையை சமா­தா­னப்­ப­டுத்தி அவ­ரது சம்­ம­தத்­து­டன் நடிக்­கத் துவங்­கி­னேன்.

"இந்த ஊர­டங்கு வேளை­யில் ஏதா­வது வித்­தி­யா­ச­மாக செய்­ய­வேண்­டும் என்று விரும்­பி­ய­போ­து­தான் வாய்ப்பு தேடி வந்­தது," என்­கி­றார் ஜோவிதா

முன்­ன­தாக இவர் இயக்­கு­நர் பார­தி­ரா­ஜா­வின் படத்­தில்­தான் அறி­மு­க­மாக இருந்­தா­ராம். எனி­னும் சில கார­ணங்­க­ளால் இந்­தப் படம் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் வருத்­தத்­தில் இருந்த மக­ளைத் தேற்­றிய லிவிங்ஸ்­டன், புதிய வாய்ப்பு வரும் வரை நம்­பிக்­கை­யு­டன் காத்­தி­ருப்­பது அவ­சி­யம் என்று அறி­வு­றுத்­தி­னா­ராம்.

"முதன்­மு­த­லாக பார­தி­ராஜா சார்­தான் என்னை நடிக்க அழைத்­தார். ஆனால், சினிமா துறை­யில் பல்­வேறு அவ­மா­னங்­களை எதிர்­கொண்­ட­வர் அப்பா.

"அவர் நாய­க­னாக நடித்­த­போது பல­ரும் விமர்­சித்­துள்­ள­னர். இதை­யெல்­லாம் தாங்­கிக்­கொண்டு அவர் நாய­க­னாக நடித்த படம் ஒன்­று­கூட சோடை போக­வில்லை. எல்­லாமே வெற்­றிப் படைப்­பு­கள்­தான்.

"உதவி இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­ய­போ­தும் மிக­வும் சிர­மப்­பட்­டுள்­ளார். இத­னால்­தான் எங்­கள் குடும்­பத்­தி­லி­ருந்து யாரும் சினி­மா­வுக்கு வரக்­கூ­டாது என்று அவர் உறு­தி­யாக இருந்­தார்.

"ஆனால் எனக்கு சிறு வய­தி­லி­ருந்தே நடிப்­பி­லும் இசை­யி­லும் ஆர்­வம் அதி­கம். எனவே, சினி­மா­வுக்கு வந்­தா­லும் நான் பாட­கி­யாக பேரெ­டுக்­க­வேண்­டும் என்­பதே அப்­பா­வின் விருப்­ப­மாக இருக்­கும். எனி­னும் நான் ஆசைப்­பட்­ட­படி நடி­கை­யாகி விட்­டேன்," என்­கி­றார் ஜோவிதா.

நடி­கர் விஜய் இவ­ரது குடும்ப நண்­ப­ராம். பார­தி­ராஜா படத்­தில் அறி­மு­க­மாக வாய்ப்பு கிடைத்­த­போது தொடர்­பு­கொண்டு வாழ்த்து கூறி­யுள்­ளார்.

"விஜய் சார் என்னை ஜோ என்று­தான் கூப்­பி­டு­வார். அவ­ரது ஒவ்­வொரு பிறந்­த­நா­ளுக்­கும் வாழ்த்து தெரி­வித்து குறுந்­த­க­வல் அனுப்­பு­வேன். அவ­ரும் அழ­கான வரி­க­ளு­டன் பதில் அனுப்­பு­வார்.

"அப்­பா­வுக்கு என்­மீ­தும் தங்கை மீதும் பாசம் அதி­கம். அம்­மா­வை­யும் எங்­க­ளை­யும் பிரிந்­தி­ருக்­கவே மாட்­டார். வெளி­யூர் படப்­பி­டிப்பு என்­றா­லும் ஒரு­வா­ரத்­துக்­கும் மேல் தொடர்ச்­சி­யாக நடிக்க மாட்­டார். கடந்­தாண்­டில்­தான் முதன்­மு­றை­யாக கிறிஸ்­மஸ் சம­யத்­தில் அப்­பா­வு­டன் இருக்க முடி­ய­வில்லை. ரஜினி அங்­கி­ளு­டன் ஹைத­ரா­பாத்­தில் படப்­பி­டிப்­பில் இருந்­தார்.

"எனி­னும் பிறகு எங்­களை ஹைத­ரா­பாத்­துக்கு வர­வ­ழைத்து ரஜினி சாரு­டன் சேர்ந்து கிறிஸ்­மஸ் கொண்­டாட வைத்­தார். அப்­போது ரஜினி அங்­கி­ளுக்கு ஒரு சட்டை பரி­ச­ளித்­தோம்.

"அவர் அதை மறு­நாளே போட்டு வந்து எங்­கள் முன் வந்து நின்ற போது இன்ப அதிர்ச்­சி­யாக இருந்­தது," என்று சொல்­லும் ஜோவி­தா­வுக்கு விஜய்க்­குத் தங்­கை­யா­க­வும் ரஜி­னிக்கு மக­ளா­க­வும் நடிக்க ஆசை­யாம்.

இதற்­கான வாய்ப்­பு­கள் கிடைத்­தால் சம்­ப­ளமே வேண்­டாம் என்று கூற­வும் தயார் என்­கி­றார்.

"கார­ணம், எனக்கு இவர்­கள் இரு­வ­ரை­யுமே ரொம்­பப் பிடிக்­கும். இரு­வ­ருமே பெரி­தா­கச் சாதித்­துக் காட்­டி­ய­வர்­கள்.

"மற்­ற­படி அப்­பா­வின் அறி­வு­ரை­களை முறை­யா­கப் பின்­பற்­று­வேன். சாதித்­துக் காட்­டு­வேன்," என்று தன்­னம்­பிக்­கை­யு­டன் பேசு­கி­றார் ஜோவிதா.