தனது காதலி ராகியை கரம்பிடித்துள்ளார் 'பிக்பாஸ்' புகழ் நடிகர் ஆரவ். சரண் இயக்கிய 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தின் மூலம் நாயகனாக உயர்ந்த ஆரவ் தற்போது 'ராஜபீமா' படத்தில் நடித்து வருகிறார். அவரும் 'ஜோஷ்வா' பட நாயகி ராகியும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தனர். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற இவர்களது திருமணத்துக்கு மிக நெருக்கமான உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்களான சினேகன், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சக்தி, சுஜா வருணி, கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.
காதலியை கைபிடித்த 'பிக்பாஸ்' ஆரவ்
1 mins read
-

