நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

1 mins read
577dce01-803f-4d4f-a414-f52d3d9b5918
தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நடித்து வந்த நடிகர் பாலாஜி வடிவேல் காலமானார்; அவருக்கு வயது 45. படம்: ஊடகம் -

தமிழ்த் திரைப்படங்களிலும் தொலைக்காட்சிகளிலும் நடித்து வந்த நடிகர் பாலாஜி வடிவேல் காலமானார்; அவருக்கு வயது 45.

மாரடைப்பு, கை மற்றும் கால்களில் முடக்கு வாதம் ஆகியவற்றுக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கான செலவைத் தாக்குப்பிடிக்க முடியாததால் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி, இன்று அவர் உயிரிழந்தார். மனைவியுடன் ஒரு மகன், ஒரு மகள் ஆகியோரையும் விட்டுச் சென்றார் திரு பாலாஜி.

முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பாணியைப் பின்பற்றி நடித்து வந்த பாலாஜிக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளமும் உண்டு.

அவரின் திடீர் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்