அறிமுக இயக்குநர் விஜய் வரதராஜ் கைவண்ணத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'பல்லு படாம பாத்துக்க'.
இதில் 'அட்டக்கத்தி' தினேஷ், சங்கீதா ஷெட்டி ஆகியோர் ஜோடி சேர்ந்துள்ளனர். இது 'ஜாம்பி' வகைப் படமாக உருவாகிறதாம்.
எனினும் படம் முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். பாலமுரளி இசையமைத்துள்ளார்.
படத்தில் இடம்பெற்ற சில வசனங்கள் காரணமாக தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கி உள்ளது. இதில் ஆனந்த் பாபு, ஜெகன், மொட்ட ராஜேந்திரன், ஷா ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

