சொந்தப்படம் எடுக்கும் அமலா பால்

சொந்தப்படம் எடுக்கும் அமலா பால்

1 mins read
1ef856b7-ece8-4541-a1be-243d2e8c8096
அமலாபால். -

ஊரடங்கின்போது அதிகம் அலட்டிக்கொள்ளாத நடிகைகளில் அமலாபாலும் ஒருவர். அண்மைய சில தினங்களாக தாம் செல்லமாக வளர்க்கும் பூனைக்குட்டி யுடன்தான் அதிக நேரத்தைச் செலவிடுகிறாராம்.

தினமும் அதற்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்வது, அதற்கு 'மசாஜ்' செய்து தூங்கவைப்பது என்று பொழுதைக் கழிக்கிறாராம். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிடுகிறார்.

இதற்கிடையே 'அதோ அந்தப் பறவை போல', 'கடவேர்' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வரும் அமலா 'கடவேர்' படத்தை சொந்தமாகத் தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது. அனூப் பனிக்கர் இயக்கும் இந்தப் படத்தில் முதன்முறையாக நோயியல் நிபுணராக நடிக்கிறாராம் அமலா. இதுதவிர மலையாளத்தில் பிருத்விராஜுடன் இணைந்து ஒரு படத்திலும் நடிக்கிறார்.