தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார் சமந்தா.
பெண்களுக்கான ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கும் 'ஃபேஷன்' நிறுவனம் ஒன்றைத் தொடங்கி உள்ளாராம். இத்துறை மீது இளம் வயதிலேயே தனக்கு ஆர்வம் இருந்ததாகச் சொல்கிறார்.
கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தைத் தொடங்கவேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாராம். கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது எண்ணம் இப்போது கைகூடியுள்ளது.
"புது ரக உடைகளை அணிவது எனக்கு மிகவும் பிடிக்கும். 'ஸ்டைல்' என்றால் சமந்தாதான் சிறந்த உதாரணம் என ரசிகர்கள் சொல்கிறார்கள் எனில் நான் இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துகிறேன் என்பதுதான் காரணம்.
"ஆடை வடிவமைப்புத் துறையின் மீது எனக்கு காதலும் மோகமும் இருப்பதாகக் கூட சொல்லலாம். நடிகையாகும் முன்பே ஆர்வம் காட்டிய துறையில் கூடுதல் மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளேன்," என்கிறார் சமந்தா.

